கண்டி பெல்கோன்ஸ் அணியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்!

Lanka Premier League 2022

287

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள கண்டி பெல்கோன்ஸ் அணியில், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் அஹ்மட் டனியல் இணைக்கப்பட்டுள்ளார்.

LPL வீரர்கள் வரைவின்போது கண்டி பெல்கோன்ஸ் அணியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி இணைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளது.

பெதும் நிஸ்ஸங்கவை தம்முடன் இணைத்த LPL அணி

உஸ்மான் ஷின்வாரிக்கு உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் அஹ்மட் டனியல் இணைக்கப்பட்டுள்ளதாக கண்டி பெல்கோன்ஸ் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளரான அஹ்மட் டனியல் பாகிஸ்தான் சுபர் லீக்கில் லாஹூர் கெலண்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.

பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாத இவர், 13 T20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கண்டி பெல்கோன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள உஸ்மான் ஷின்வாரி கடந்த ஆண்டு கிண்ணத்தை வென்றிருந்த ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

மூன்றவாது பருவகாலத்துக்கான LPL தொடர் இம்மாதம் 31ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<