அஜ்மிரின் கோல் மூலம் புளூ ஸ்டார் அணிக்கு வெற்றி

252

வெலிசரை, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற 9 ஆவது வாரத்தின் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் மொஹமட் அஜ்மிரின் கோல் மூலம் விமானப்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எதிர்பாராத வகையில் முன்னேற்றம் கண்டிருக்கும் புளூ ஸ்டார் கழகம் 7 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும் தடுமாற்றம் கண்டிருக்கும் விமானப் படை 8 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் இருக்கும் நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற போட்டியில் களமிறங்கின.

குளோப் கால்பந்து விருதை வென்று புதிய மைல்கல்லை எட்டிய ரொனால்டோ

இந்த பருவத்தின் ஆரம்ப போட்டியில் புளூ ஸ்டார் அணி இதே மைதானத்தில் மைதானத்தின் சொந்த அணியான நேவி சீ ஹோக்ஸை வீழ்த்திய நம்பிக்கையுடனே இந்தப் போட்டியில் களமிறங்கியது.

விமானப்படை அணி பந்தை நேர்த்தியாக பரிமாற்றிய அதேவேளை புளூ ஸ்டார் கோல் பெறும் சந்தர்ப்பங்களை உருவாக்கியது. ஆரம்பத்தில் மொஹமட் அஜ்மீர் நெருக்கடியுடன் பந்தை கடத்திச் செல்ல, அது கோல்காப்பாளர் பந்தை நோக்கில் முன்னால் வரக் காரணமானது. இதனால் இருவரும் மோதிக்கொண்டதால் நீண்ட நேரம் போட்டி நிறுத்தப்பட வேண்டி ஏற்பட்டது.  

மன்ஜுல பெர்னாண்டோ தனது நிலையில் இருந்து விலகியபோது விமானப் படை அணிக்கு கோல் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் கெலும் பெரேரா உதைத்த பந்து நேராக கோல்காப்பாளரிடம் சென்றது.

மைதானத்தின் அரைப்பாதிக்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக் ஒன்றை லஹிரு தாரக்க சிறப்பாக பரிமாற்ற இரீன்சி சிமெசி தனது தலையால் முட்டி வலைக்குள் செலுத்த முயன்றபோது கோல்கம்பத்திற்கு வெளியால் பறந்தது. புளூ ஸ்டார் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.     

தொடர்ந்து சிமென்சி எதிரணி வீரர்களை முறியடித்து பந்தை கடத்திச் சென்று இடது காலால் உதைத்த பந்து இலக்கு தவறியதாக இருந்தது.

புளூ ஸ்டார் தனது பின்களத்தில் செய்த தவறுதலான பரிமாற்றம் ஒன்றால் பந்து விமானப்படை அணிக்கு சென்றது. எனினும் கவிந்து இஷான் பந்தை உதைக்க அது கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியே சென்றது.

முதல் பாதி: புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 0 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில் கவிந்து இஷான் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் ஓப் சைட் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இஷான் மற்றொரு வாய்ப்பை தவறவிட, கடைசியில் புளூ ஸ்டார் அணியால் போட்டியில் முன்னிலை பெற முடிந்தது. மொஹமட் இஷான் எதிரணி பின்கள வீரர்களுக்கு மேலால் பந்தை பரிமாற்ற அஜ்மிர் அதனை பெறும் முயற்சி ஆரம்பத்தில் திசானாயக்க மூலம் தடுக்கப்பட்டது. அதிர்ஷ்ட வசமாக பந்து அஜ்மிரிடம் சிக்கியது. எதிரணி பின்கள வீரர்கள் சுதாகரிக்க தவறிய நிலையில் அவர் பந்தை வலையை நோக்கி செலுத்தினார்.

16 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிந்த புஷ்பகுமார; CCC இலகு வெற்றி

போட்டி கடைசி நேரத்தை எட்டும்போது விமானப்படை பதில் கோல் திருப்புவதில் அவசரம் காட்டியது. எனினும் போட்டியின் கடைசி நேரத்தில் புளூ ஸ்டார் அணிக்கு இரு கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அந்த அணி அதனை சரியாக கையாள தவறியது. முதல் கோல் வாய்ப்பின்போது உதைத்த பந்து வெளியே செல்ல தொடர்ந்து மூன்று ஆபிரிக்க வீரர்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய கோல் வாய்ப்பு திசானாயக்க மூலம் முறியடிக்கப்பட்டது.

இறுதி நேரத்தில் கவிந்து இஷான் உதைத்த பந்து அகலப் பறக்க போட்டி நடுவர் விசிலை ஊதிய பின் புளூ ஸ்டார் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.    

முழு நேரம்: புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்

  • ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – எபுஸ்ஜ்வா சிகோசி (புளூ ஸ்டார் வி.க.)

கோல் பெற்றவர்கள்

புளூ ஸ்டார் வி.க. – மொஹமட் அஜ்மிர் 66′

மஞ்சள் அட்டைகள்

புளூ ஸ்டார் வி.க. – தரிந்து எரங்க 44′

விமானப்படை வி.க. – திமுத் லக்மால் குணசிங்க 80′, டில்ஷான் பெர்னாண்டோ 82′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<