ஜப்னா வொலிபோல் லீக்கின் போட்டி அட்டவணை வெளியானது!

532

யாழ் மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தை முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்லும் வகையில், முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League)  தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போட்டித்தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், சங்கானை மக்களொன்றிய சேலஞ்சர்ஸ் மற்றும் நீர்வை பசங்க அணிகள் முதல் போட்டியில் மோதவுள்ளன. 

ஜப்னா வொலிபோல் லீக் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

ஒரு நாளில் மொத்தமாக 4 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், லீக் போட்டிகள் ஏப்ரல் 11ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றன. லீக் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், குவாலிபையர், எளிமினேட்டர் போட்டிகள் ஏப்ரல் 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. முதல் குவாலிபையர் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்படும் என்பதுடன், எளிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும்.  

எலிமினேட்டர் போட்டி ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறும் என்பதுடன், தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் 24ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறும். குவாலிபையர், எளிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிகள் புத்தூர் ஆவரங்கால் மைதானத்தில் நடைபெவுள்ளன. 

அதேவேளை, ஏனைய போட்டிகள் அரியாலை சரஸ்வதி சனசமூக மையம், ஆவரங்கால் மைத்திய விளையாட்டு கழக மைதானம், கலைநிதி விளையாட்டு கழகம், மாவடி இந்து இளையோர் விளையாட்டு கழகம், சண்டிலிப்பாய் இந்து இளையோர் விளையாட்டு கழகம், நீர்வெளி காமாட்சியம்பாள் விளையாட்டு கழகம், மட்டுவில் மோஹனதாஸ் விளையாட்டு கழகம், ஆவரங்கால் இந்து இளையோர் விளையாட்டு கழகம் மற்றும் வல்வெட்டித்துறை விளையாட்டு மைதானங்கள் என்பவற்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லீக் போட்டிகளின் அட்டவணை 

Grounds Name Date Match NO Time Team Vs Team
Ariyalai Saraswathy Community Centre, Kandy Road, Ariyalai 20.03.2021 1 10.30 NEP CMC
2 14.30 MAS RIS
3 16.30 AKF CSA
4 18.30 AK100 VVW
Central Sports Club,Sivan Veethy,Avrangal 21.03.2021 5 10.30 MAS SNP
6 14.30 AKF CMC
7 16.30 VVW RIS
8 18.30 AK100 CSA
Kalanithy Sports Club, Karainagar 27.03.2021 9 10.30 AKF NEP
10 14.30 VVW SNP
11 16.30 AK100 CMC
12 18.30 RIS CSA
Mavdy Hindu Youth Sports club, Infront of Bus stand, Chankanai 28.03.2021 13 10.30 VVW MAS
14 14.30 AK100 NEP
15 16.30 CSA SNP
16 18.30 RIS CMC
Hindu Youth Sports Club,Sandilipay 02.04.2021 17 10.30 AK100 VVW
18 14.30 CSA MAS
19 16.30 RIS NEP
20 18.30 CMC SNP
Kamadchchi Ambal Sports Club,Neervely 03.04.2021 21 10.30 CSA VVW
22 14.30 RIS AKF
23 16.30 CMC MAS
24 18.30 SNP NEP
Mohanathas Sports,Cllub,Madduvil 04.04.2021 25 10.30 RIS AK100
26 14.30 CMC VVW
27 16.30 SNP AKF
28 18.30 MAS NEP
Hindu Youth Sports Club, Market Lane, Avarankal 10.04.2021 29 10.30 CMC CSA
30 14.30 SNP AK100
31 16.30 NEP VVW
32 18.30 MAS AKF
Vallvetithurai Sports Club,Vallvetithurai 11.04.2021 33 10.30 SNP RIS
34 14.30 NEP CSA
35 16.30 MAS AK100
36 18.30 AKF VVW

மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க …