சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான டிக்கெட் விலைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான டிக்கெட்டுகளை ஜுன் 24ஆம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட் சபையின் www.srilankacricket.lk இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல, நேரடி டிக்கெட் விற்பனை ஜூன் 29ஆம் திகதி ஆரம்பமாகும்.
இதற்கிடையில், நேரடி டிக்கெட்டுகளை கொழும்பு வித்தியா மாவத்தையிலும், கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், மற்றும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் உள்ள டிக்கெட் விற்பனை நிலைங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது மற்றும் 2ஆவது ஒருநாள் போட்டிகள் ஜுலை 2, 5 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், 3ஆவது ஒருநாள் மற்றும் முதலாவது T20I போட்டி ஜுலை 8, 10 ஆகிய திகதிகளில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், 2ஆவது T20I போட்டி ஜுலை 13ஆம் திகதி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, கடைசி ஒருநாள் போட்டி ஜுலை 16ஆம் திகதி மீண்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:
RPICS, Colombo: 1 and 2nd ODI and 3rd T20I
Stand | Prize (LKR) |
Grand Stand, Top Level Seats | 3,000 |
Block ‘A’ and ‘B’ Upper Level Seats | 2,000 |
Block ‘A’ and ‘B’ Lower Level Seats | 1,000 |
Block ‘C’ and ‘D’ Upper Level Seats | 750 |
Block ‘C’ and ‘D’ Lower Level Seats | 500 |
Corporate Box ( 16 seats) | 120,000 |
PICS, Pallekele: 3rd ODI and First T20I
Stand | Prize ( LKR) |
Grass Embankment (Standing) | 500 |
A and B Seats | 1,000 |
Grand Stand Top Level A | 3,000 |
Corporate Box (22 Seats) | 165,000 |
RDICS, Dambulla: 2nd T20I
Stand | Prize (LKR) |
Grand Stand Level 3 ( seats) | 3,000 |
Block ‘A’ Seats | 1,000 |
Block ‘B’ Seats | 1,000 |
Block C/D/E/F Lower Seats | 1,000 |
Block ‘H’ Seats | 1,000 |
Block C/D/E/F Upper ( Standing) | 750 |
Sigiriya End ( Standing) | 500 |
Corporate Box (16 Seats) | 120,000 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<