சீரற்ற காலநிலையால் முடிவை எட்டாத மேஜர் எமர்ஜிங் லீக் போட்டிகள்

69

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் இரண்டு நாட்கள் கொண்ட “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரில் இன்று (20) இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்தன.

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் காலி கிரிக்கெட் கழகம் – கடற்படை கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

சமனிலையில் முடிந்த BRC – SSC மோதல்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும்…

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று  முதலில் துடுப்பெடுத்தாடிய பதுரெலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஆட்டம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு, போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டி சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 170 (65.2) – சச்சின் பெர்னாண்டோ 77, ரவிந்து ரத்நாயக்க 20, பவன் டி சில்வா 3/19

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 99/3 (23.1) – வகீச மதுஷன் 27*, உமயங்க சுவாரிஸ் 23*, மிலிந்த ஜயோத் 3/31

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

காலி கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை கிரிக்கெட் கழகம்

காலி சர்வேதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது. போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி 140 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும், இந்தப் போட்டியில் சீரற்ற காலநிலை தொடர்ந்ததால், கடற்படை அணியின் இன்னிங்சுடன் போட்டி நிறைவை எட்டியது.

போட்டி சுருக்கம்

கடற்படை கிரிக்கெட் கழகம் – 140/6 (42) – நவோத் சமரகோன் 45, சஜித் பெர்னாண்டோ  41, கவிந்து டில்ஹார 3/29, ரவிஸ்க விஜேயசிறி 3/40

காலி கிரிக்கெட் கழகம்

முடிவு – போட்டி சமனிலை 

www.thepapare.com/tamil/cricket