ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள்

250

லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) அனைத்து பிரிவுகளிலும் விருதுகளை தட்டிச் சென்றனர்.

ரொனால்டோவின் ‘பைசிகல் கிக்’ ஐரோப்பாவின் சிறந்த கோலாக தெரிவு

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ …

பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறிய குரோஷிய அணித்தலைவரும் ரியல் மெட்ரிட்டின் மத்தியகள வீரருமான லூகா மொட்ரிக், முன்னாள் சக அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் முன்கள வீரர் முஹமட் சலாஹ் ஆகியோரைப் பின்தள்ளி ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார்.

மொனாகோவில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் ரியல் மெட்ரிட்டின் கைலர் நாவாஸ் கடந்த பருவத்தின் சிறந்த கோல் காப்பாளராகவும், செர்ஜியோ ராமோஸ் சிறந்த பின்கள வீரராகவும், கிறிஸ்டியானோ ரொனால்டோ பருவத்தின் சிறந்த முன்கள வீரராகவும் தெரிவாகி விருதுகளை வென்றனர்.

இம்முறை பிஃபா உலகக் கிண்ணத்தில் தங்கப் பந்து விருதை வென்ற லூகா மொட்ரிக் சிறந்த வீரருக்கான விருது மட்டுமன்றி சிறந்த மத்தியகள வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

மொட்ரிக் சிறந்த வீரருக்கான விருதை வெல்ல, இந்த விருதை மூன்று முறை வென்ற ரொனால்டோவை (223 புள்ளிகள்) பின்தள்ளி 313 புள்ளிகளை பெற்றார். கடந்த பருவத்தில் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட்டுக்காக ரொனால்டோ 44 போட்டிகளில் 44 கோல்களை பெற்ற நிலையில் தற்போது ஜுவண்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.

கடந்த பருவத்தில் அபார திறமையை வெளிக்காட்டி இருந்த சலாஹ் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களை பெற்ற நிலையில் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் 134 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

‘எனது கனவை நோக்கி போராடுவதற்கு எனது தந்தை எப்போதும் ஊக்குவிப்பார், இவை அனைத்திற்கும் நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன்’ என்று மொட்ரிக் குறிப்பிட்டார். ஒரு களைப்பில்லாத மத்தியகள வீரராக செயற்படும் மொட்ரிக் ரியெல் மெட்ரிட் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஐரோப்பிய பட்டத்தை வெல்ல பெரும் பங்களிப்புச் செய்தார்.  

இதனிடையே மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் மத்தியகள வீரர் டேவிட் பெகம் UEFA தலைவர் விருதை வென்றார். வாழ்நாள் சாதனை மற்றும் முன்மாதிரியான குணங்களுக்காகவே இந்த விருது வழங்கப்படுகிறது.  

டென்மார்க் மற்றும் வொல்ப்பேர்க் கழகத்தைச் சேர்ந்த பெர்னில் ஹார்டர் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனை விருதை வென்றார்.   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…