பென் ஸ்டோக்ஸின் போட்டி வருமானம் பாகிஸ்தான் மக்களுக்கு

128

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைக்கும் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்குவதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9ஆம் திகதி முல்தானிலும், கடைசி டெஸ்ட் போட்டி 17ஆம் திகதி கராச்சியிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புக்கு வழங்குவதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது மற்றும் இங்கு இருப்பது சிறப்பிக்குரியது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ள அனர்த்தத்தை பார்த்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான சம்பளத்தொகையை பாகிஸ்தான் வெள்ளப் பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு முதல்முறையாக வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே இப்படி ஒரு பரந்த மனதுடன் செய்த உதவியை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவிக்கிறார்கள். அதேபோல, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும், நட்சத்திரங்களும் கிரிக்கெட்டை தாண்டி இப்படி ஒரு மனித நேயத்துடன் உதவியதற்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறார்கள்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<