உள்ளூர் போட்டிகளில் கலக்கும் குசல் மென்டிஸ் மற்றும் மலிந்த புஷ்பகுமார

1132
 

2017/2018 பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் சுற்றுத் தொடரின் பிரிவு A மற்றும் பிரிவு B இற்கான போட்டிகல் இன்று நிறைவுற்றன.

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் NCC

NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் NCC அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற NCC அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தமிழ் யூனியன் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடிய தமிழ் யூனியன் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 38.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய NCC அணி 75 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய தமிழ் யூனியன் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

தவான், ஐயர் ஆகியோரின் சிறப்பாட்டத்தோடு ஒரு நாள் தொடர் இந்தியா வசம்

105 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய NCC அணி 10.5 ஓவர்களில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

 

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 117 (38.3) – மனோஜ் சரத்சந்திர 33, தரிந்து கௌஷால் 2/19, சாமிக கருணாரத்ன 2/19, லஹிரு குமார 2/21, லசித் எம்புல்தெனிய 2/25

NCC (முதலாவது இன்னிங்ஸ்) – 234 (75) – லஹிரு உதார 45, மஹேல உடவத்த 38, சந்துன் வீரக்கொடி 34, மலிங்க அமரசிங்க்ஹ 29, பிரமோத் மதுஷான் 5/69

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 221 (67.1) – தினேத் திமொத்ய 71, ஜீவன் மென்டிஸ் 67, லசித் எம்புல்தெனிய 5/55, தரிந்து கௌஷால் 4/86

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 105/0 (10.5) – சந்துன் வீரக்கொடி 52*, லஹிரு உதார 51*

முடிவு – NCC அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது  

 

SSC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் SSC அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சரசென்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை SSC அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய SSC அணி தமது முதல் இன்னிங்சுக்காக 94 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 444 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சரசென்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து  238 ஓட்டங்களைப் பெற்றது. பொல்லொவ் ஓன் (follow on) முறைக்கு தள்ளப்பட்ட சரசென்ஸ் அணி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.

உபாதையிலிருந்து மீண்டு SSC அணிக்காக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய தம்மிக்க பிரசாத்

பின்னர் 52 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய SSC அணி 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.  

 

போட்டியின் சுருக்கம்

SSC (முதலாவது இன்னிங்ஸ்) – 444/4d (94) – சம்மு அஷான் 107, மிலிந்த சிறிவர்தன 137*, திமுத் கருணாரத்ன 83, கௌஷால் சில்வா 42, கவிந்து குலசேகர 39*, சதுர ரந்துனு 1/71

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 238 (61) – ஹர்ஷா குரே 90, அண்டி சொலொமான்ஸ் 27, மின்ஹாஜ் ஜலீல் 25, சசித்திர பெரேரா 33*, தம்மிக்க பிரசாத் 4/66, விமுக்தி பெரேரா 2/45, ஜெப்ரி வண்டர்சே 2/80

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – f/o 258 (71.3) – மின்ஹாஜ் ஜலீல் 58, கமிந்து கனிஷ்க 42, பிரமோத் மதுவந்த 63, ரிஸ்வான் ஹைதர் 33, ஜெப்ரி வண்டர்சே 4/72, மிலிந்த சிறிவர்தன 2/48

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 55/3 (6.4) – சம்மு அஷான் 31*.

முடிவு – SSC அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.    

 

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது நாள் மழை காரணமாக பாதிக்கப்பட்டு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது .

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம அணி முதலில் துடுப்பெடுத்தாடி தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த கொழும்பு கோல்ட்ஸ் அணி 60.3 ஓவர்களில் 190 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பொல்லொவ் ஓன் முறைக்கு தள்ளப்பட்டது.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை போட்டி மழை காரணமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  

 

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 401/9d (106.1) – சமீர டி சொய்சா 86 சமிந்த பெர்னாண்டோ 55, இஷான் ஜயரத்ன 62, ஜனித் லியனகே 51, லஹிரு மிலந்த 33, ரொஷேன் சில்வா 36, நிசள தாரக 5/110, கவீஷ அஞ்சுல 2/82

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 190 (60.3) – அவிஷ்க பெர்னாண்டோ 30, அனசெலோ ஜயசிங்ஹ 24, அமில அபோன்சோ 4/47, சதுர பீரிஸ் 2/25

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்)- f/o 73/2 (14)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

 

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பு விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை சோனகர் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழக அணி தமது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 444 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த சோனகர் விளையாட்டுக்கழகம் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை போட்டி நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 444/6d (118.5) – ப்ரிமோஷ் பெரேரா 121, ஷானுக துலாஜ் 62*, சாமர சில்வா 58, சஹான் விஜேரத்ன 45, லக்ஷான் சந்தகன் 2/100

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 388 (101.4) – குசல் மென்டிஸ் 177, கவீன் பண்டார 60, அஷான் ப்ரியஞ்சன் 53. ஷிரான் பெர்னாண்டோ 3/98, தரிந்து ரத்னாயக்க 5/118

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 26/1 (8)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

 

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்சுக்காக 293 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய BRC அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றது.

 

T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 94 என்ற இலகு வெற்றி இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்தது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய BRC அணி 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.  

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 293 (87.2) – சசித்திர சேரசிங்ஹ 63, ஒஷத பெர்னாண்டோ 47, மலிந்த புஷ்பகுமார 34, சுராஜ் ரந்திவ் 6/90, சமிகர எதிரிசிங்ஹ 2/72

BRC (முதலாவது இன்னிங்ஸ்) – 316 (81.1) – ரமேஷ் புத்திக்க 123, TN சம்பத் 96, லசித் லக்ஷான் 40, மலிந்த புஷ்பகுமார 5/102, சசித்திர சேரசிங்ஹ 4/76

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 117 (43.4) – சசித்திர சேரசிங்ஹ 53, புலின தரங்க 28, ஹிமேஷ் ராமநாயக்க 5/34, சமிகார எதிரிசிங்க்ஹ 3/17  

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 94 (43.1) – ஹர்ஷ விதான 35*, மலிந்த புஷ்பகுமார 5/51, சசித்திர சேரசிங்ஹ 4/31

முடிவு – போட்டி சமநிலையில் (TIED) முடிவு   

 

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்   

பனாகொடை இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவுற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துறைமுக அதிகார சபை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இராணுவ விளையாட்டுக் கழக அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இராணுவ அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துறைமுக அதிகாரசபை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 272 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த இராணுவப்படை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை போட்டி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 224 (98) – லியோ பிரான்சிஸ்கோ 57, கசுன் டி சில்வா 40, சானக்க கோமசாரு 3/28, ஆதில் மலிக் 2/30, மதுக்க லியனபதிரனகே 2/43

துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதலாவது இன்னிங்ஸ்) – 272 (85.3) –  யொஹான் டி சில்வா 76, பிரஷான் விக்ரமசிங்ஹ 61, நுவன் லியனபதிரனகே 3/72, லக்‌ஷான் மதுசங்க 2/32, சஞ்சிக ரித்ம 2/13

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்)- 143/5 (43) – கசுன் டி சில்வா 46*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.