பென் ஸ்டோக்கிற்கு அபராதம் விதித்த ஐ.சி.சி

148
Cricket Australia

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளானதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவையானது அவர் மீது அபராதம் விதித்துள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கன்னி இரட்டைச் சதத்தை…

இந்நிலையில் நேற்று முன்தினம் (24) ஜொஹனஸ்பேர்க்கில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் நான்காவதும், இறுதியுமான போட்டியில் தொடரை சமப்படுத்தும் முனைப்பில் தென்னாபிரிக்க அணி களமிறங்கியுள்ளது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கடந்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் பலமாக விளங்கிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், அன்ரிச் நோட்ரேயின் பந்துவீச்சில் 46 ஆவது ஓவரில் வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து அரங்கம் திரும்பிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த ரசிகர் ஒருவர் பென் ஸ்டோக்ஸ் மீது ஏதோ ஒரு வார்த்தை பிரயோகத்தை உபயோகித்திருந்தார். இதனால் வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஆத்திரத்துடன் அரங்கம் திரும்பிய பென் ஸ்டோக்ஸ் குறித்த ரசிகர் மீது தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டார். 

குறித்த சம்பவமானது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. இதற்காக பென் ஸ்டோக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனால் குறித்த சம்பவத்தை தொடர்ந்து போட்டியின் கள நடுவர்களான ப்ரூஸ் ஒக்ஸன்பேர்ட், ஜொய்ல் வில்சன், மூன்றாம் நடுவர் ரொட் டக்கர் மற்றும் நான்காம் நடுவர் அலஹ்டீன் பலேகர் ஆகியோரினால் குறித்த வார்த்தை பிரயோகமானது போட்டியின் மத்தியஸ்தர் அண்டி பைக்ரொப்டிடம் முன்வைக்கப்பட்டது. 

பாபர் அசாம், ஹபீஸின் அதிரடியோடு T20 தொடர் பாகிஸ்தான் வசம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது T20…

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையில் வீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நடத்தை கோட்பாடுகளை உள்ளடக்கும் இலக்கம் 2.3 இன்படி சர்வதேச போட்டியொன்றின் போது உபயோகிக்கக்கூடாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியதன் அடிப்படையில் பென் ஸ்டோக்ஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி போட்டி மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் குறித்த சம்பவத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தண்டனையை பென் ஸ்டோக்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதுவும் தேவைப்படாது என்பதை ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<