அமெரிக்க மண்ணில் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி  

130
Courtsey - PETER DELLA PENNA

அமெரிக்க மண்ணில் எதிர்வரும் 13ஆம் திகதி வரலாற்றில் முதலாவது தடவையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெறவிருக்கின்றது.  

இந்த ஒருநாள் போட்டியில் அமெரிக்கா மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய அணிகள் பங்கெடுவிக்கின்றன. வரலாற்று பூர்வமிக்க இந்த ஒருநாள் போட்டி ஐ.சி.சி. உலக லீக் முக்கோண ஒருநாள் தொடரின் ஒரு அங்கமாக அமைகின்றது.

முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்லாமைக்கு இந்தியா காரணமா? – பதில் கூறும் ஹரின்

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளாமைக்கு இந்தியா எந்த விதத்திலும் காரணமாகாது…

அதேநேரம், முக்கோண ஒருநாள் தொடரில் அமெரிக்கா, பபுவா நியூ கினியா ஆகிய அணிகளுடன் சேர்த்து நமிபிய கிரிக்கெட் அணியும் பங்கெடுக்கவிருக்கின்றது. இந்த முக்கோண ஒருநாள் தொடரின் போட்டிகள் யாவும் இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றன.

இந்த தொடரில் ஆறு போட்டிகள் இருக்கின்ற போதிலும், நான்கு போட்டிகள் மாத்திரமே ஒருநாள் போட்டிகளாக காணப்படுகின்றது. இந்த முக்கோண ஒருநாள் தொடரின் போட்டிகள் யாவும் அமெரிக்காவின் லோடர்டெல் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றன.

அதேநேரம், இந்த முக்கோண ஒருநாள் தொடரில் ஆடும் மூன்று அணிகளும் அதில் சிறப்பாக செயற்படுவதன் மூலம் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ள முடியும்.

மேலும், இந்த ஒருநாள் தொடர் மூலம் பபுவா நியூ கினியா அணிக்கு ஒருநாள் அணிகள் தரவரிசைக்காக புள்ளிகளை எடுத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

முக்கோண ஒருநாள் தொடர் அட்டவணை (லோடர்டெல் மைதானம்)

செப்டம்பர் 13 – அமெரிக்கா எதிர் பபுவா நியூ கினியா

செம்டம்பர் 17 – அமெரிக்கா எதிர் நமிபியா

செம்டம்பர் 19 – அமெரிக்கா எதிர் பபுவா நியூ கினியா

செம்டம்பர் 20 – அமெரிக்கா எதிர் நமிபியா

செம்டம்பர் 22 – பபுவா நியூ கினியா எதிர் நமிபியா

செம்டம்பர் 23 – பபுவா நியூ கினியா எதிர் நமிபியா  

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க