பாபர் அசாம், ஹபீஸின் அதிரடியோடு T20 தொடர் பாகிஸ்தான் வசம்

108
Getty Images

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது T20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

மலிக்கின் அரைச்சதத்துடன் வெற்றிப் பாதைக்கு திரும்பியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணிக்கு திரும்ப…………

பாகிஸ்தான் சென்றுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த T20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று, அவ்வணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (25) லாஹூரில் தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் மஹமதுல்லா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார். இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்கள் பெற்றது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக சிறந்த முறையில் செயற்பட்ட தமிம் இக்பால் அவரின் 7 ஆவது T20 அரைச்சதத்தோடு 53 பந்துகளில் 7 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார்.

அதேநேரம், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைன் 2 விக்கெட்டுக்கள் எடுக்க, ஹரிஸ் ரவுப், சதாப் கான் மற்றும் சஹீன் ஷாஹ் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிலுக்கு துடுப்பாடியது. 

வெற்றி இலக்கிற்கான பயணத்தில், பாகிஸ்தான் தரப்பு  ஆரம்பத்தில் ஒரு சிறு தடுமாற்றத்தினை காண்பித்தது. எனினும், அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 16.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் அரைச்சதங்களை பூர்த்தி செய்திருந்தனர். இதில், ஹபீஸ் அவரின் 11 ஆவது T20 அரைச்சதத்தோடு 49 பந்துகளுக்கு 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, பாபர் அசாம் 44 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 66 ஓட்டங்கள் பெற்றிருந்தார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் சபியுல் இஸ்லாம் மாத்திரமே ஒரு விக்கெட்டினை சாய்த்திருக்க, ஏனைய அனைவரும் மோசமாக செயற்பட்டிருந்தனர். 

போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஹெய்லிஸ் இறுதிப் போட்டிக்கு

அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி………..

இப்போட்டியில் அடைந்த தோல்வியுடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடரை இழந்திருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்து திங்கட்கிழமை (27) T20 தொடரின் கடைசிப் போட்டியில் விளையாடவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 136/6 (20) – தமிம் இக்பால் 65(53), மொஹமட் ஹஸ்னைன் 20/2(4)

பாகிஸ்தான் – 137/1 – (16.4) மொஹமட் ஹபீஸ் 67*(49), பாபர் அசாம் 66*(44), சபியுல் இஸ்லாம் 27/1(3)

முடிவு – பாகிஸ்தான் 9 விக்கெட்டு…க்களால் வெற்றி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<