இந்தியாவில் T20 உலகக் கிண்ணம்: ‘கவுன்ட் டவுண்’ ஆரம்பம்

260
Sourav Ganguly Twitter

இந்தியாவில் T20i உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் டுபாயில் வைத்து உத்தியோகப்பூர்மாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்டோபர்நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த T20 உலகக் கிண்ணத் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே திட்டமிட்டபடி, 2021இல் (ஒக்டோபர் – நவம்பர்) T20i உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெறும் என .சி.சி அறிவித்தது.

IPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்

எனினும், கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படாத நிலையில், இந்த தொடர் நடப்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில், அடுத்த வருடம்க்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள 7ஆவது T20 உலகக் கிண்ணத் தொடருக்கானகவுன்ட் டவுண்நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் (11) டுபாயில் நடைபெற்றது

இதில், இந்திய கிரிக்கெட் சபையின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி, பி.சி.சி. இன் செயலாளர் ஜெய் ஷா, .சி.சி இன் தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னி ஆகியோர் பங்கேற்றனர்

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தம் குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், அடுத்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதை மிகப் பெரும் கௌரவமாக கருதுகிறோம். 

1987இல் இருந்து பல உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களை நடத்திய அனுபவம் இந்தியாவுக்கு உண்டு. அத்துடன், ஐ.சி.சி இன் முக்கிய தொடர்களில் வீரராக பங்கேற்றுள்ளேன். இம்முறை நிர்வாகியாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இதனிடையே, உலகக் கிண்ணத் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஜெய் ஷா கூறுகையில், வீரர்களின் ஆரோக்கியம், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா வரும் அனைத்து அணிகளுக்கும் சிறப்பான உபசரிப்பு வழங்கப்படும். சொந்த நாட்டில் இருப்பதை போல உணர்வர். 

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

இதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தியர்களின் விருந்தோம்பல் சிறப்பை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் எங்களின் வரவேற்பும், வசதிகளும் இருக்கும். 

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் எந்த வித சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதுடன், புதுமைகளை புகுத்தவும் முயற்சிப்போம்” என தெரிவித்தார்.

இதேநேரம், T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறுவது குறித்து .சி.சி இன் தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னி கூறுகையில்

”உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் 12 மாதங்களே உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா உட்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. பி.சி.சி.ஐ., உடன் சேர்ந்து பாதுகாப்பான முறையில் தொடரை நடத்துவோம். ஐ.பி.எல்., தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெற்றிகரமாக நடத்திய பி.சி.சி.ஐ.,க்கு பாராட்டுக்கள்” என குறிப்பிட்டார்

கடைசியாக 2016இல் இந்தியாவில் T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றதுடன், இதில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<