பங்களாதேஷை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

317

பங்களாதேஷுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச டி20 போட்டி இன்று (22) நடைபெற்றது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்களில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. டி20 தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

சகீப் அல் ஹசன், கார்லோஸ் பரத்வெயிட் ஆகியோருக்கு இரட்டிப்பு அபராதம்

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லூவிசின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒரு கட்டத்தில் 200 ஓட்டங்களை தாண்டும் என எதிர்பார்ககப்பட்ட போதும் அவர்களால்  19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் லூவிஸ் 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்களை விளாசியிருந்தார். மேலும் நிக்கோலஸ் புரான் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் முறையே 29, 23 ஓட்டங்கள் என பெற்று தமது பங்களிப்பை அணிக்கு வழங்கியிருந்தனர். பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் மஹ்மதுல்லாஹ், முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தொடரை கைப்பற்றுவதாயின் 191 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லிட்டொன் தாஸ் தவிர ஏனைய வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் அவர்களின் வெற்றிக்கனவை தகர்த்தது என்றால் அது மிகையாகாது. இறுதியில் பங்களாதேஷ் அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. லிட்டொன் தாஸ் அதிகபட்சமாக 43 பெற்றிருந்ததுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய கீமோ போல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி டி20 போட்டிகளில் தனது சிறந்த பந்து வீச்சு பிரதியை பதிவு செய்ததுடன்  பெபியன் அலென் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லூவிஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தோடு தொடர் நாயகனாக பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 190 (19.2) – எவின் லூவிஸ் 89, நிக்கொலஸ் புரான் 29, மஹ்மதுல்லாஹ் 18/3, முஸ்தபிஷுர் ரஹ்மான் 33/3, ஷகிப் அல் ஹஸன் 37/3

பங்களாதேஷ் – 140 (17) – லிடொன் தாஸ் 43, அபூ ஹைதர் 22*, கீமோ போல் 15/5, அலென் 19/2

முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<