பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு சரித்திர வெற்றி

184

பங்களாதேஷுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒரு போட்டியை கொண்ட டெஸ்ட் போட்டியில் 224 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான் அணி. இது வெளிநாட்டு மண்ணில் பெறப்பட்ட அவர்களது முதலாவது வரலாற்று வெற்றியாகும்.  

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அவ்வணி சார்பாக இப்ராஹீம் ஜத்ரான், கைஸ் அஹமட் மற்றும் ஜாஹிர் கான் என மூவர் தமது அறிமுக போட்டியில் விளையாடியிருந்தனர்.  

டெஸ்ட் வரலாற்றில் இளம் அணித்தலைவராக இடம்பிடித்த ரஷீட் கான்

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (05)…..

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கிய ராஷித் கான் டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கிய இளம் வீரர் என்ற சாதனையை தன் வசமாக்கியிருந்தார்அவருக்கு வயது  20 ருடங்களும் 350 நாட்களுமே ஆகும். இதற்கு முன்னர் இச்சாதனைக்கு சொந்தக் காரராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் டெடென்டா தைபு இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஹ்மத் ஷாஹ் பெற்றுக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் சதத்தின் உதவியுடன் சவால் மிக்க ஓட்ட எண்ணிக்கையான 342 ஓட்டங்களை தமது முதலாவது இன்னிங்ஸிற்காக பெற்றுக் கொண்டது ஆப்கானிஸ்தான். அந்த அணி சார்பாக ரஹ்மத் ஷாஹ் 102, அஸ்கர் ஆப்கான் 92 மற்றும் அணித்தலைவர் ரஷித் கான் 51 ஓட்டங்கள் என தமது அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர். பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் நயீம் ஹஸன் மற்றும் ஷகிப் அல் ஹஸன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் என வீழ்த்தியிருந்தனர்

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி ரஷித் கானின் சுழலில் சுருண்டது. அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 137 ஒட்டங்களால் பின்தங்கியிருந்தது. துடுப்பாட்டத்தில் முஃமினுல் ஹக் அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களையும் மொசத்திக் ஹொசைன் 48 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 5 விக்கெட்டுகளையும், மொஹமட் நபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக மீண்டும் சகீப் அல் ஹசன்

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு…..

பின்னர், 137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ராஹீம் ஜத்ரான் மற்றும்  அஸ்கர் ஆப்கான் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி தமக்கிடையே 108 ஓட்டங்களை பகிர்ந்து அணியை வலுப்படுத்தினர்

அஸ்கர் ஆப்கான் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததை தொடர்ந்து இப்ராஹீம் ஜத்ரான் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்று 397 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அப்சர் ஷசாய் 48 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். பந்து வீச்சில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.  

டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் தாங்கள் விளையாடுகின்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலே  பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் 398 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நேற்றைய (8) நான்காம் நாள் ஆட்ட நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் 39 மற்றும் சௌமியா சர்கார் ஓட்டமெதுவும் பெறாமலும் களத்தில் இருந்தனர்

மேலதிகமாக இன்னும் 262 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் பங்களாதேஷ் அணியும் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் எண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் இன்று (10) ஐந்தாவது நாள் ஆட்டத்தை எதிர்பார்திருந்த போதும் மழையின் குறுக்கீட்டால் போட்டி தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டதுஎனினும் ஆரம்பித்து சில நிமிடங்களில் மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது

இன்றைய நாளின் இறுதி மணித்தியாலம் எஞ்சியிருக்கும் நிலையில் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவது பந்திலே பங்களாதேஷ் அணித்தலைவர் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. தொடர்ந்த ரஷித் கான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்க பங்களாதேஷ் அணி 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது

இப்போட்டியுடன் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான மொஹமட் நபி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் 75 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 11 விக்கெட்டுக்களையும் பெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கான் தெரிவு செய்யப்பட்டார்

இப்போட்டி .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு உள்ளடக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் அணி (முதல் இன்னிங்ஸ்) – 342 – ரஹ்மத் ஷாஹ் 102, அஸ்கர் ஆப்கான் 92, ராஷித் கான் 51, தைஜுல் இஸ்லாம் 116/4

பங்களாதேஷ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 205 – முஃமினுல் ஹக் 52, மொசத்திக் ஹொசைன் 48*, ராஷித் கான் 55/5, மொஹமட் நபி 56/3

ஆப்கானிஸ்தான் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 260 – இப்ராஹீம் ஜத்ரான் 87, அஸ்கர் ஆப்கான் 50, அப்சர் ஷசாய் 48, ஷகிப் அல் ஹசன் 58/3

பங்களாதேஷ் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 173 – ஷகிப் அல் ஹசன் 44, சத்மான் இஸ்லாம் 41, ராஷித் கான் 49/6, ஜாஹிர் கான் 59/3

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<