அற்புதமான டோக்கியோ ஒலிம்பிக் தொடரினை ThePapare.com உடன் இணைந்து இரசியுங்கள்

Tokyo Olympics - 2020

143
A Magnificent Event - TOKYO Coverage Announcement

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடர்களின் கோர்வையாக இருக்கும் 32ஆவது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் ஜூலை 23 ஆம் திகதி ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமாகின்றது.

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் (IOC) பல தடைகள், சிக்கல்கள் என அனைத்தினையும் தாண்டி கடந்த ஆண்டு (2020) நடைபெறவிருந்த இந்த வரலாற்று நிகழ்வை அந்த ஆண்டு நடத்தி முடிக்க ஒழுங்கு செய்திருக்கின்றது.

>> Video – குதிரைச் சவாரியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் Mathilda Karlsson..!| Tokyo Olympic 2020

இலங்கை முதற்தர விளையாட்டு இளையத்தளமான ThePapare.com ஆகிய நாம் இந்த வரலாற்று நிகழ்வின் தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் தருவதற்கு சத்தியப்பிரமாணம் எடுத்திருப்பதுடன், இந்த தொடருக்கு எங்களது பிரதிநிதியாக புகைப்பட ஊடகவியலாளர் (Photojournalist) தினுஷ்கி ரணசிங்கவையும் டோக்கியோ நகருக்கு அனுப்பவுள்ளது. 

இந்த ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் தொடரில் இலங்கையினை  9 விளையாட்டு வீர வீராங்கனைகள் வெவ்வேறு போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இதில் ஜிம்னாஸ்ட்டிக்கில் மில்கா டெஹானியும், ஜூடோவில் சாமர நுவானும் இலங்கைக்கு கௌரவம் பெற்றுத்தர காத்திருக்கும் அதேநேரத்தில் இலங்கையின் மூத்த ஒலிம்பிக் வீரர் நிலுக கருணாரட்னவும் பட்மின்டன் தொடரில் ஜொலிக்கவுள்ளார். 

இதேநேரம் தடகளப் போட்டிகளில் பிரிவில் யுபுன் அபேயகோன் மற்றும் நிமாலி லியானஆரச்சி ஆகியோர் இலங்கையின் புகழை பறைசாற்றவுள்ள நிலையில், நீச்சல் போட்டிகளில் மெதிவ் அபேசிங்க, அனிக்கா கபூர் போன்றவர்களும் ஜொலிக்க காத்திருக்கின்றனர். 

இதுதவிர டெஹானி எகோடாவெல துப்பாக்கிச்சூடு நிகழ்ச்சியிலும், இலங்கையின் புகழை சுவிட்சர்லாந்து வரை கொண்டு சென்ற மதில்டா கார்ல்ஸன் குதிரைச் சவாரியிலும் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கவுள்ளனர். 

>> ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த இலங்கையின் மில்கா கிஹானி

எனவே, இலங்கையர்கள் பங்குபெறும் இந்த ஒலிம்பிக் தொடர் பற்றிய அனைத்து விபரங்களையும் வழங்குவதற்கு ThePapare.com இன் அனைத்து ஊழியர்களும் இது நிறைவுறும் வரையில் கடினமான உழைப்பினை வழங்க காத்திருக்கின்றனர். 

நீங்கள் இந்த ஒலிம்பிக் தொடர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு, ThePapare.com வழங்குகின்ற SMS சேவையிலும் இணைந்து கொள்ள முடியும். 

ThePapare.com இந்த ஒலிம்பிக் தொடரில் உடனுக்குடனான செய்திகள், புகைப்படத்தொகுப்புக்கள், அறிக்கைகள், சிறப்புக்கட்டுரைகள், Vlog அடங்கலான காணொளிகள், நேர்காணல்கள் மற்றும் இன்னும் பல அம்சங்களை வழங்க காத்திருக்கின்றது. 

எனவே, ஒலிம்பிக் தொடர் பற்றிய முழுமையான தகவல்களுக்கு ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<