மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான க்றிஸ் கெய்ல் ஐ.பி.எல். தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் க்றிஸ் கெய்ல் 10 ஓட்டங்களை எடுத்தால் இருபதுக்கு20 போட்டிகளில் 9000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

க்றிஸ் கெய்ல் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்துவகை இருபதுக்கு20 லீக் கிரிக்கட் போட்டிகளிலும் விளையாடிவருகிறார்.

இறுதிப்போட்டியில் பெங்களூர்

இந்தியாவில் நடைபெறும் .பி.எல். மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் போன்ற தொடர்களில் அதிக அளவில் விளையாடிவருகிறார். இருபதுக்கு20 தொடரில் அதிக சதம், தனிபட்ட முறையில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள், 12 பந்தில் அரைச்சதம் அடித்து அதிவேக அரைச்சதம் போன்ற சாதனைகளை கெய்ல் படைத்துள்ளார்.

தற்போது கிறிஸ் கெய்ல் மற்றொரு மைல்கல்லை எட்ட இருக்கிறார். தற்போது வரை இருபதுக்கு20 போட்டிகளில் 8990 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் 10 ஓட்டங்களைப் பெற்றால் இருபதுக்கு20 போட்டிகளில் 9000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையை கெய்ல் தன்வசப்படுத்துவார்.

க்றிஸ் கெய்ல் விளையாடியுள்ள இருபதுக்கு 20 அணிகள்

பரிசல் பர்னர்கள், டாக்கா கிளாடியேட்டர்ஸ்,  ஜமைக்கா தலஹவ்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் கலாண்டர்ஸ், டஸ்கர்ஸ், மெல்போர்ன் ரெநேகேட்ஸ்,  பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ், சமர்செட், ஸ்டான்போர்ட் சூப்பர்ஸ்டார்ஸ், சிட்னி தண்டர், மேற்கு அவுஸ்திரேலியா

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்