காலநிலை சீர்கேட்டினால் சமநிலையான பாகிஸ்தான் – இங்கிலாந்து டெஸ்ட்

93
Getty Images

செளத்தம்ப்டன் நகரில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி காலநிலை சீர்கேட்டினால் திங்கட்கிழமை (17) சமநிலை அடைந்திருக்கின்றது.

மேஜர் லீக் சுப்பர் 8 இல் அசத்திய பானுக, அகில, மிலிந்த

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடுகின்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமையும் நிலையில், தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்காக 40 புள்ளிகளை எடுத்த இங்கிலாந்து அணி தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 

தொடர்ந்து இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தீர்க்கமாக அமையவிருந்த இரண்டாவது போட்டியே சீரற்ற காலநிலை காரணமாக சமநிலை அடைந்திருக்கின்றது.

இப்போட்டி சமநிலை அடைந்திருப்பதால் இங்கிலாந்து – பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக தலா 13 புள்ளிகள் வீதம் பெற்றுக் கொள்கின்றன.

இதேநேரம் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட முன்னர் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்திருந்ததோடு, இங்கிலாந்து அணியும் தமது முதல் இன்னிங்ஸில் சில ஓவர்களுக்கு துடுப்பாடியிருந்தது.

இதில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக சிறப்பாக துடுப்பாடியிருந்த மொஹமட் ரிஸ்வான், ஆபிட் அலி ஆகியோர் அரைச்சதங்களைப் பூர்த்தி செய்திருந்தனர். அந்தவகையில், மொஹமட் ரிஸ்வான் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 7 பெளண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் பெற, ஆபிட் அலி 60 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்

இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு பாகிஸ்தான் தமது முதல் இன்னிங்ஸில் 236 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதேநேரம், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான ஸ்டுவார்ட் புரோட் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்டுக்களை தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக ஷேக் கிராவ்லி அரைச்சதம் பூர்த்தி செய்து 53 ஓட்டங்கள் குவித்திருந்தார். இங்கிலாந்து அணி ஷேக் கிராவ்லி இன் துடுப்பாட்ட உதவியோடு 110 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இதேவேளை, மொஹமட் அப்பாஸ் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு பாகிஸ்தான் அணிக்காக 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இனி, இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இதே செளத்தம்ப்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 236 (91.2) மொஹமட் ரிஸ்வான் 72, ஆபிட் அலி 60, பாபர் அசாம் 47, ஸ்டுவார்ட் புரோட் 56/4, ஜேம்ஸ் அன்டர்சன் 60/3

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 110/4d (43.1) ஷேக் கிராவ்லி 53, மொஹமட் அப்பாஸ் 28/2

 முடிவு – ஆட்டம் சமநிலை அடைந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க –