LPL தொடருடன் இணையும் முன்னணி கிரிக்கெட் வர்னணையாளர்கள்!

275
Commentary Panel for LPL

இலங்கையில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடருக்கான வர்னணையாளர்கள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில், 5 நாடுகளை சேர்ந்த ஆறு முன்னணி கிரிக்கெட் வர்னணையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வீரரான ரசல் ஆர்னல்ட் மற்றும் இலங்கை கிரிக்கெட் வர்னணையளார் ரொஷான் அபேசிங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

>> லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் மாற்றம்

இவர்களை தவிர்த்து, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக் ஹெய்ஸ்மன், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆமீர் சொஹைல், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஹேர்ஷல் கிப்ஸ், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டெரன் கங்கா ஆகியோர் சர்வதேச வர்னணையாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் எதிர்வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளதுடன், டிசம்பர் 16ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிகள் அனைத்தும் ஆரம்பத்தில் கண்டி – பல்லேகலை மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை மைதானங்களில் நடைபெறவிருந்தன. எனினும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

>> Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த லங்கா ப்ரீமியர் லீக்கில், காலி க்ளேடியேட்டர்ஸ், கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புள்ளை லையன்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய 5 அணிகள் மோதவுள்ளதுடன், ஒவ்வொரு அணிகளும், எதிரணியுடன் தலா இரண்டுமுறை மோதவுள்ளன. 

இதேவேளை, லங்கா ப்ரீமியர் லீக்கின் ஒளிபரப்பு உரிமம் மற்றும் சந்தைப்படுத்தல் உரிமங்களை டுபாய் நிறுவனமான IPG  வாங்கியுள்ள நிலையில், போட்டிகள் அனைத்தும் இந்திய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றான சோனி பிட்ச்சர்ஸ் நெட்வேர்க் மூலமாக ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<