இலங்கை A அணிக்கு தொடர் தோல்வி

95

இலங்கை A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 152 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய A அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வெற்றி கொண்டுள்ளது.

தோல்வியை நோக்கி நகரும் இலங்கை A அணி

இந்திய A அணியுடனான இரண்டாவது………

ஹுப்லி, நெஹ்ரு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று (03) 430 ஓட்ட வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை A அணி மேலும் 15 ஓவர்களில் எஞ்சியிருந்த மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் பானுக்க ராஜபக்ஷ இலங்கை சார்பில் அபார சதம் பெற்றபோதும் ஏனைய வீரர்கள் சோபிக்கத் தவறினர். கமிந்து மெண்டிஸ் 46 ஓட்டங்களையும் பின் வரிசையில் விஷ்வ பெர்னாண்டோ 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி இலங்கை வீரர்கள் 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இந்திய A அணியின் சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சஹார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் சுழலுக்கு பதில் கூறுமா இலங்கை?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் ………..

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய A அணி 269 ஓட்டங்களை பெற்றதோடு, இலங்கை தனது முதல் இன்னிங்ஸுக்கு 212 ஓட்டங்களையே பெற்றது.  

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய A அணி 372 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள இந்நிலையில், அடுத்து இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் முதல் போட்டி ஜூன் 6 ஆம் திகதி பெல்கவுமில் நடைபெறும்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<