ரோயல் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகளுக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

261
Singer U19 Schools

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுபெற்ற போட்டிகளில் ரோயல் கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.

ரோயல் கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி

இத்தொடரின் குழு ‘B’ இற்கான போட்டியொன்றில் ரோயல் கல்லூரி அணியை எதிர்த்து இசிபதன கல்லூரி அணி போட்டியிட்டது. முதல் நாளான நேற்றைய ஆட்ட நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்களை பெற்றிருந்த இசிபதன கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 263 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

முதல் நாள் ஆட்டத்தில் ரோயல் கல்லூரி ஆதிக்கம்

சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சஞ்சுல பண்டார (66) மற்றும் அயன சிறிவர்தன (60) இசிபதன கல்லூரி இலக்கை நெருங்குவதற்கு ஏதுவாக அமைந்தனர். எனினும் அபாரமாக பந்து வீசிய ஹிமேஷ் ராமநாயக்க 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்க்க, இசிபதன கல்லூரி 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்படி ரோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டதுடன், அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது.

முன்னர் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணி, பசிந்து சூரியபண்டார (79) மற்றும் ரேணுக ஜயவர்தனவின் (49) அதிரடியினால் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் இசிபதன கல்லூரியின் ரித்மிக நிமேஷ், நிரஞ்சன் வன்னியாராச்சி மற்றும் லஹிரு டில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 310/9d (70.2) – பசிந்து சூரியபண்டார 79, ரேணுக ஜயவர்தன 49, ஹெலித விதானகே 40, ரித்மிக நிமேஷ் 2/15, நிரஞ்சன் வன்னியாராச்சி 2/35, லஹிரு டில்ஷான் 2/67

இசிபதன கல்லூரி  (முதல் இன்னிங்ஸ்) – 277 (72.3) – சஞ்சுல பண்டார 66, அயன சிறிவர்தன 60, ஹிமேஷ் ராமநாயக்க 5/52, கனித் சந்தீப 3/35

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ரோயல் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி


நாலந்த கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

19 வயதிற்கு உட்பட்டோருக்கான மற்றுமொரு கிரிக்கெட் போட்டியில் நாலந்த கல்லூரியும் டி மெசனொட் கல்லூரியும் மோதிக் கொண்டன. நேற்றைய தினம் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்றிருந்த டி மெசனொட் கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 188 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.

எனினும் அபாரமாக பந்து வீசிய உமேஷ்க டில்ஷான் 4 விக்கெட்டுகளையும், லக்ஷித ரசஞ்சன 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த  டி மெசனொட் கல்லூரி 131 ஓட்டங்களுக்கே சுருண்டது. துடுப்பாட்டத்திலும் தனது அணி சார்பாக தனித்து போராடிய மிதில கீத் ஆட்டமிழக்காது 28  ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய நாலந்த கல்லூரி, போட்டி நிறைவுபெறும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றிருந்தது. மலிங்க அமரசிங்க அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். அதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் நாலந்த கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

முன்னர், முதலில் களமிறங்கிய நாலந்த கல்லூரி 65 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக சுஹங்க விஜேவர்தன மற்றும் கசுன் சந்தருவன் 40 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அசத்திய மிதில கீத் 26 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 229 (65) – சுஹங்க விஜேவர்தன 40, கசுன் சந்தருவன் 40, மிதில கீத் 4/26

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) –131 (46.3) – மிதில கீத் 28*, உமேஷ்க டில்ஷான் 4/19, லக்ஷித ரசஞ்சன 3/21  – சந்தீப் தேஷான் 23

நாலந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 133/4 (26) – மலிங்க அமரசிங்க 66, தசுன் செனவிரத்ன 39, சங்கீத் தேஷான் 2/55

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. நாலந்த கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி