இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸ் கொரோனாவால் பாதிப்பு

125

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜேம்ஸ் வின்ஸ் கொவிட் – 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் T20i தொடரின் பிளேப் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானை வந்தடைந்த வண்ணம் உள்ளனனர்.

>>இங்கிலாந்து தொடருக்கான தென்னாபிரிக்கா குழாம் அறிவிப்பு<<

இந்த நிலையில், முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு பாகிஸ்தான் வருகை தரவிருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸுக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   

அவருக்கு முதலில் கொரோனா வைரஸிற்காக அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எனினும், அடுத்த PCR பரிசோதனைக்கு அவர் முகங்கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

எனவே, அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன், 10 நாட்கள் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் பிளேப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வர மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பிக் பேஷ் T20i தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட ஜேம்ஸ் வின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

>>கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள மஹ்மதுல்லாஹ்!<<

இதேநேரம், ஜேம்ஸ் வின்ஸுக்குப் பதிலாக முல்தான் சுல்தான்ஸ் அணியில் மற்றுமொரு இங்கிலாந்து வீரரான ஜோ டென்லியை இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.  

முன்னதாக முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம்பெற்ற பங்காளதேஷ் T20i அணித் தலைவர் மஹ்மதுல்லாஹ்வுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதுஇதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் இருந்து அவர் வெளியேறினார்.

இதனால் அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் மொயீன் அலியை மாற்று வீரராக அறிவிக்க முல்தான் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<