இலங்கையின் பயிற்சிப் போட்டி அட்டவணை வெளியீடு

1757

ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கு முன் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (26) வெளியிட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இம்முறை உலகக் கிண்ணத்தில், போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தகுதிகாண் தொடர் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில், 10 அணிகளும் பங்குபற்றுகின்ற பயிற்சி ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அனைத்து அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்,

ஒவ்வொரு அணியும் ஜூன் 13 செவ்வாய்க்கிழமை முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோதும் என்பதுடன், ஜுன் 15ஆம் திகதி இரண்டாவது பயிற்சிப் போட்டி நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கையின் குழு இதுவா?

தகுதிகாண் சுற்றில் குழு பி இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, முதல் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியையும், இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஐக்கிய அமெரிக்கா அணியையும் சந்திக்கவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் முறையே குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் புலவாயோ அத்லெட்டிக் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து தகுதிகாண் சுற்றில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை புலாவாயோவில் ஜூன் 19ஆம் திகதி சந்திக்கும். தொடர்ந்து ஓமானை ஜூன் 23ஆம் திகதியும், அயர்லாந்தை ஜூன் 25ஆம் திகதியும், ஸ்கொட்லாந்தை ஜூன் 27ஆம் திகதியும் சந்திக்கும். இலங்கை அணியின் போட்டிகள் அனைத்து புலவாயோவில் நடைபெறவுள்ளது.

பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை

  • செவ்வாய், 13 ஜூன்
  • மேற்கிந்திய தீவுகள் எதிர் ஸ்கொட்லாந்து –  ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • ஜிம்பாப்வே எதிர் ஓமான் – தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்
  • நேபாளம் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – ஓல்ட் ஹராரியன்ஸ் கிரிக்கெட் கிளப்
  • இலங்கை எதிர் நெதர்லாந்து – குயின்ஸ் விளையாட்டுக் கழகம்
  • அயர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா – புலவாயோ அத்லெட்டிக் கிளப்
  • வியாழன், 15 ஜூன்
  • நேபாளம் எதிர் ஓமான் – ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
  • மேற்கிந்திய தீவுகள் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் – தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்
  • ஜிம்பாப்வே எதிர் ஸ்கொட்லாந்து – ஓல்ட் ஹராரியன்ஸ் கிரிக்கெட் கிளப்
  • அயர்லாந்து எதிர் நெதர்லாந்து – குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
  • இலங்கை எதிர் ஐக்கிய அமெரிக்கா – புலவாயோ அத்லெட்டிக் கிளப்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<