தினேஷ் சந்திமால் – பக்கர் ஜமானின் இணைப்பாட்டம் ஆட்டம் மற்றும் முஜிபுர் ரஹ்மானின் அபார பந்துவீச்சினால் தம்புள்ள அவுரா அணிக்கு எதிராக நேற்று (04) நடைபெற்ற LPL போட்டியில் பி-லவ் கண்டி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
LPL தொடரின் 6ஆவது லீக் போட்டியில் பி–லவ் கண்டி அணியும், தம்புள்ள அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்தின. கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அவுரா அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவுரா அணி, ஆரம்பத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன், 5.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ஓட்டங்களை எடுத்து தடுமாறியிருந்தது.
எனினும், அந்த அணியின் அனுபவ வீரரான தனன்ஜய டி சில்வா தனியொருவராக நின்று ஆடி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அபாரமாக ஆடிய அவர் அரைச் சதம் கடந்து வெறும் 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். LPL போட்டிகளில் தனன்ஜயவின் 2ஆவது அரைச் சதம் இதுவாகும்.
மறுமுனையில் அவிஷக் பெர்னாண்டோ 32 ஓட்டங்களையும், அலெக் ரொஸ் 21 ஓட்டங்களையும் எடுத்து வலுச்சேர்த்தனர்.
இதன்மூலம் தம்புள்ள அவுரா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பி–லவ் கண்டி அணி தரப்பில் முஜிபுர் ரஹ்மான் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், இசுரு உதான 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- செய்பர்ட்டின் அதிரடி ஆட்டத்துடன் கோல் அணிக்கு இரண்டாவது வெற்றி
- வெல்லாலகேவின் அபார பந்துவீச்சுடன் ஜப்னாவுக்கு இரண்டாவது வெற்றி
- தம்புள்ளையை சுபர் ஓவரில் வீழ்த்தியது கோல் டைட்டன்ஸ்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி–லவ் கண்டி அணிக்கு தினேஷ் சந்திமால் – பக்கர் ஜமான் ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இதில் முதல் பந்திலிருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பக்கர் ஜமான் 26 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 28 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 29 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ், ஆசிப் அலி ஆகிய இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 20 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பௌண்டரிகளுடன் 28 ஓட்டங்களையும், ஆசிப் அலி 8 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 16 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதன்மூலம் பி–லவ் கண்டி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தம்புள்ள அவுரா அணியை வீழ்த்தி, நடப்பாண்டு LPL தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. அதேபோல, தம்புள்ள அவுரா அணி 2ஆவது தோல்வியைத் தழுவியது.
போட்டியின் ஆட்டநாயகன் விருது பி–லவ் கண்டி அணியின் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | c Mujeeb ur Rahman b Isuru Udana | 32 | 31 | 3 | 1 | 103.23 |
Kusal Mendis | c Kamindu Mendis b Dushmantha Chameera | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Sadeera Samarawickrama | lbw b Mujeeb ur Rahman | 14 | 6 | 3 | 0 | 233.33 |
Kusal Janith | lbw b Mujeeb ur Rahman | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Dhananjaya de Silva | c Ashen Bandara b Isuru Udana | 61 | 39 | 5 | 3 | 156.41 |
Alex Ross | b Mohammad Hasnain | 21 | 18 | 3 | 0 | 116.67 |
Hayden Kerr | not out | 12 | 13 | 1 | 0 | 92.31 |
Extras | 5 (b 0 , lb 3 , nb 1, w 1, pen 0) |
Total | 156/6 (20 Overs, RR: 7.8) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Angelo Mathews | 1 | 0 | 5 | 0 | 5.00 | |
Mujeeb ur Rahman | 4 | 0 | 17 | 2 | 4.25 | |
Dushmantha Chameera | 4 | 0 | 40 | 1 | 10.00 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 23 | 0 | 5.75 | |
Mohammad Hasnain | 3 | 0 | 35 | 1 | 11.67 | |
Isuru Udana | 4 | 0 | 33 | 2 | 8.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Fakhar Zaman | c & b Dhananjaya de Silva | 28 | 26 | 5 | 0 | 107.69 |
Dinesh Chandimal | run out (Kusal Mendis) | 48 | 29 | 7 | 0 | 165.52 |
Kamindu Mendis | c & b Hayden Kerr | 18 | 28 | 1 | 0 | 64.29 |
Angelo Mathews | not out | 28 | 20 | 2 | 1 | 140.00 |
Asif Ali | not out | 16 | 8 | 3 | 0 | 200.00 |
Extras | 22 (b 5 , lb 1 , nb 0, w 16, pen 0) |
Total | 160/3 (18.3 Overs, RR: 8.65) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Binura Fernando | 3 | 0 | 21 | 0 | 7.00 | |
Dhananjaya de Silva | 3 | 0 | 16 | 1 | 5.33 | |
Shahnawaz Dahani | 3.3 | 0 | 46 | 0 | 13.94 | |
Ravindu Fernando | 1 | 0 | 17 | 0 | 17.00 | |
Hayden Kerr | 4 | 0 | 28 | 1 | 7.00 | |
Noor Ahmad | 4 | 0 | 26 | 0 | 6.50 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<