19 வயதிற்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக அவிஷ்க பெர்னான்டோ

371
Avishka Fernando

இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான அணி மற்றும் தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோருக்கான அணிகளுக்கு இடையிலான தொடருக்கு மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி அணி வீரர் அவிஷ்க பெர்னான்டோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனிஷ்ட தேசிய தேர்வுக் குழு தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடும்,15 பேர் கொண்ட குழாமை பெயரிட்டுள்ளது. இந்தக் குழாமில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி சார்பாக 6 போட்டிகளில் 153 ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னான்டோ தலைவராக நியமிக்கப்பட்டுளளார்.

தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோருக்கான அணி இலங்கையில் 3 வாரங்கள் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

15 பேர் குழாம்

1.அவிஷ்க பெர்னான்டோ
2. சம்மு அஷான்
3. தமித்த சில்வா
4. விஷாட் ரந்திக்க
5. சஞ்சுல அபேவிக்ரம
6. விஷ்வ சதுரங்க
7. நவிந்து நிர்மால்
8. அஷென் பண்டார
9. ஹசித போயகொட
10. பெத்தும் நிசங்க
11. பிரவீன் ஜயவிக்ரம
12. திலன் பிரசான்
13.வனித வன்னிநாயக்க
14. திசறு டில்ஷான்
15. திலங்க உதேசன்

மேலதிக வீரர்கள்

1.சனோகித் சண்முகநாதன்
2. ஜெஹென் டேனியல்
3. மிஷென் சில்வா

 கால நேர அட்டவணை

பயிற்சிப் போட்டி – 20 மற்றும் 21 ஜூன் ( MCA மைதானம்)
1வது இளைஞர் டெஸ்ட் – ஜூன் 23, 24 மற்றும் 25 (பி. சாரா ஓவல் மைதானம்)
2வது இளைஞர் டெஸ்ட் – ஜூன் 28, 29 மற்றும் 30. ( வெலகெதர மைதானம்)
3வது இளைஞர் டெஸ்ட் – ஜூலை 3, 4 , மற்றும் 5 (பல்லேகல மைதானம்)

1 வது இளைஞர் ஒருநாள் போட்டி – ஜூலை 9 (பி.சாரா ஓவல் மைதானம்)
2 வது இளைஞர் ஒருநாள் போட்டி – ஜூலை 11 (NCC மைதானம்)
3 வது இளைஞர் ஒருநாள் போட்டி – ஜூலை 13 (SSC மைதானம்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்