லுகாகுவின் இரட்டை கோல்களினால் பெல்ஜியம் இலகு வெற்றி

UEFA EURO 2020

139
Belgium vs Russia
Courtesy - Euro

சனிக்கிழமை (12) இடம்பெற்ற யூரோ 2020 கால்பந்து தொடரில் இரண்டாம் நாளுக்கான போட்டிகளில் பெல்ஜியம், பின்லாந்து அணிகள் வெற்றிகளைப் பெற, வேல்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் நிறைவடைந்தது. 

இதன்போது, டென்மார்க் அணி வீரர் கிறிஸ்டீன் எரிக்சன் தீடீரென்று மைதானத்தில் சரிந்து வீழ்ந்த நிகழ்வு கால்பந்து உலகை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 

ரஷ்யா எதிர் பெல்ஜியம்

ரஷ்யாவின் செய்ண்ட் பீடர்ஸ்பேக் நகரில் உள்ள Krestovsky அரங்கில் ஆரம்பமான குழு B இற்கான இந்தப் போட்டியில் பெல்ஜியம் தமது முக்கிய வீரர்கள் பலர் இன்றியே விளையாடியது. 

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் ரொமெலு லுகாகு பெற்ற கோலினால் உலகின் முன்னணி அணியான பெல்ஜியம் முன்னிலை பெற்றது. 

>> இலகு வெற்றியுடன் யூரோ 2020ஐ ஆரம்பித்த இத்தாலி

தொடர்ந்து 27ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு மாற்று வீரராக வந்த மியுனர், தான் வந்து 7 நிமிடங்களில் கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து அணியை இரண்டு கோல்களினால் முன்னிலைப் படுத்தினார். 

தொடர்ந்தும் அதிகம் தமக்கிடையே பந்தை வைத்து விளையாடிய பெல்ஜியம் வீரர்களுக்கு 88வது நிமிடத்தில் லுகாகு அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார். 

இறுதிவரை ரஷ்ய வீரர்களால் ஒரு கோலையும் பெற முடியாமல் போக, போட்டி நிறைவில் பெல்ஜியம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 

முழு நேரம்: ரஷ்யா 0 – 3 பெல்ஜியம்

கோல் பெற்றவர்கள்   

  • பெல்ஜியம்- ரொமெலு லுகாகு 10’ & 88’, தோமஸ் மியுனர் 34’

டென்மார்க் எதிர் பின்லாந்து  

பின்லாந்து அணிக்கு எதிராக டென்மார்க்கின் பாகென் அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் சொந்த மைதான வீரர்கள் முதல் கோலுக்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும், பின்லாந்து கோல் காப்பாளர் Hradecky எதிரணியின் அனைத்து முயற்சிகளையும் தடுத்தார்.

இந்நிலையில், போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் சக வீரர் வழங்கிய Throw ball ஒன்றை பெறும்போது டென்மார்க்கின் கிறிஸ்டீன் எரிக்சன் திடீரென்று அப்படியே சரிந்து மைதானத்தில் வீழ்ந்தார். உடனே வீரர்களும் நடுவரும் மருத்துவ உதவியை கோர, அங்கு வந்த மருந்துவ குழு அவருக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  

>> Video – செல்சிக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ள TUCHEL இன் வரவு ! | FOOTBALL ULAGAM

எனினும், நீண்ட நேரம் அவருக்கு மைதானத்தில் வைத்து மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டார். இதன்போது மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் அவருக்காக பிரார்தனைகளில் ஈடுபட்டனர். 

பின்னர், கிறிஸ்டீன் எரிக்சனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

Erickson
Reuters

இந்த நிலையில், மைதானத்தில் அச்ச நிலைமை தொடர்ந்தமையினால், இந்தப் போட்டி இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

பின்னர் மீண்டும் தாமதமாகி போட்டி ஆரம்பமானது. இதன்போது எரிக்சனுக்கு மாற்று வீரராக ஜேன்சன் களமிறக்கப்பட்டார். 

பின்னர், இரண்டாம் பாதியில் 59ஆவது நிமிடத்தில் Joel Pohjanpalo பந்தை ஹெடர் செய்து பின்லாந்து அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். இதன்போது டென்மார்க் அணியின் கோல் காப்பாளர் பந்தை தடுக்க முயற்சித்தபோது, அவரது கைகளில் பட்டு பந்து கோலுக்குள் சென்றது. 

தொடர்ந்து 74ஆவது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு கோல் பெறுவதற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது, Pierre-Emile Højbjerg உதைந்த பந்தை Hradecky தடுத்தார். 

Watch – இலங்கை கால்பந்து அணியில் இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள்…! 

எனவே, போட்டி நிறைவின்போது பின்லாந்து 1-0 என வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

முழு நேரம்: டென்மார்க் 0 – 1 பின்லாந்து

கோல் பெற்றவர்கள்  

  • பின்லாந்து – Joel Pohjanpalo 59’

வேல்ஸ் எதிர் சுவிட்சர்லாந்து 

வேல்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற யூரோ 2020 கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டியில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட கோல்களினால் போட்டி 1-1 என சமநிலையடைந்தது.

Wales
Reuters

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அசர்பிஜனில் உள்ள மிகப் பெரிய அரங்கான பாகு ஒலிம்பிக் அரங்கில் இடம்பெற்ற A குழுவுக்கான இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் பெற முடியாமல் போனது. 

இந்நிலையில், இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் சகிரியின் பந்துப் பரிமாற்றத்தினால் எம்போலோ சுவிட்சர்லாந்து அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

இந்த ஆட்டத்தில் 60 வீதத்தை விட அதிகமாக ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக, 74ஆவது நிமிடத்தில் மொர்ரெல் வழங்கிய பந்தினால் மோரே போட்டியை சமப்படுத்தும் கோலை வேல்ஸ் அணிக்குப் பெற்றுக் கொடுத்தார். 

இதன் பின்னர் எந்தவித கோல்களும் பெறப்படாமையினால், போட்டி நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன. 

முழு நேரம்: வேல்ஸ் 1 – 1 சுவிட்சர்லாந்து  

கோல் பெற்றவர்கள்  

  • வேல்ஸ் – கீப்பெர் மோரே 74’
  • சுவிட்சர்லாந்து – ப்ரீல் எம்போலோ 49’ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<