இலங்கைக்கு எதிராக பலமான குழாத்தை அறிவித்துள்ள ஆஸி.

1251

எதிர்வரும் ஜூன் மாதம், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூவகைப் போட்டிகளும் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் ஆடவுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கெடுக்கும் தமது அணிக் குழாம்களை அறிவித்திருக்கின்றது.

>>இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஜூன் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த சுற்றுப் பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட T20I தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பன அடங்குகின்றன.

இந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில், பேட் கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் 16 பேர் கொண்ட அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம் இலங்கை வீரர்களை எதிர்கொள்ளவிருக்கின்றது.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரரான மார்கஸ் ஹர்ரிஸிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம் வேகப்பந்துவீச்சாளரான ஜை ரிட்சர்ஸனிற்கும் டெஸ்ட் குழாத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடாது போயிருந்த முன்னணி வீரர்களான டேவிட் வோர்னர், ஜோஸ் ஹேசல்வூட், மிச்சல் ஸ்டார்க், ஸ்டீவ் ஸ்மித், மெதிவ் வேட் மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோருக்கு இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I மற்றும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

>>இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் முபாரக்

இதேநேரம் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித்தலைவரான பெட் கம்மின்ஸிற்கு இலங்கை தொடரின் போது நடைபெறவுள்ள T20I போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதேவேளை, சுழல்பந்துவீச்சாளரான அடம் ஷம்பா தனது முதல் குழந்தையினை எதிர்பார்த்திருப்பதன் காரணமாக இலங்கை சுற்றுப் பயணத்தில் ஆடும் வாய்ப்பை முழுமையாக இழந்திருக்கின்றார்.

இதேவேளை பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது தன்னுடைய முதலாவது சர்வதேச சதத்தினைப் பதிவு செய்த துடுப்பாட்டவீரர் மெக்டெர்மோட், கவுண்டி போட்டிகளில் ஆடிவரும் பந்துவீச்சு சகலதுறைவீரர் மைக்கல் நெஸர் ஆகியோருக்கும் இலங்கை சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேவேளை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் உள்ளடக்கப்படாது போன ஜை ரிட்சர்ட்ஸன், அவுஸ்திரேலிய T20I அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இந்த சுற்றுப் பயணத்தின் போது, அவுஸ்திரேலிய A அணியும் இலங்கை வரவிருப்பதோடு அவ்வணி ஹம்பந்தோட்டையில் நடைபெறவுள்ள நான்கு நாட்கள் கொண்ட 2 போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

அவுஸ்திரேலிய T20I குழாம் – ஆரோன் பின்ச் (தலைவர்), ஷோன் எப்போட், அஷ்டன் ஏகார், ஜோஸ் ஹேசல்வூட், ஜோஸ் இங்கிலீஷ், மிச்சல் மார்ஸ், கிளன் மெக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர், மெதிவ் வேட்

அவுஸ்திரேலிய ஒருநாள் அணி – ஆரோன் பின்ச் (தலைவர்), அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கெரி, பேட் கம்மின்ஸ், கெமரோன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபச்சேனே, மிச்சல் மார்ஷ், கிளன் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர்

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி – பேட் கம்மின்ஸ் (தலைவர்), அஷ்டன் ஏகார், ஸ்கொட் போலன்ட், அலெக்ஸ் கெரி, கெமரோன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபச்சேனே, நதன் லயன், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர்

அவுஸ்திரேலிய A அணி – ஷோன் எப்போட், ஸ்கொட் போலன்ட், பீட் ஹன்ஸ்கொம்ப், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஹர்ரிஸ், ட்ராவிஸ் ஹெட், ஹென்ரி ஹன்ட், ஜோஸ் இங்கிலீஷ், மெதிவ் குஹ்னமென், நிக் மெடின்சன், டோட் மேர்பி, ஜோஸ் பிலிப்பே, மேட் ரென்சாவ், ஜை ரிச்சர்ட்ஸன், தன்வீர் சங்கா, மார்க் ஸ்க்கேட்டே 

சுற்றுத்தொடர் அட்டவணை

T20I தொடர் 

ஜூன் 7 – முதல் போட்டி – கொழும்பு

ஜூன் 8 – இரண்டாவது போட்டி – கொழும்பு 

ஜூன் 11 – மூன்றாவது போட்டி – கண்டி 

ஒருநாள் தொடர் 

ஜூன் 14 – முதல் போட்டி – கண்டி 

ஜூன் 16 – இரண்டாவது போட்டி – கண்டி 

ஜூன் 19 – மூன்றாவது போட்டி – கொழும்பு 

ஜூன் 21 – நான்காவது போட்டி – கொழும்பு 

ஜூன் 24 – ஜந்தாவது போட்டி – கொழும்பு

டெஸ்ட் தொடர் 

ஜூன் 29-ஜூலை 03 – முதல் போட்டி – காலி 

ஜூலை 08-12 – இரண்டாவது போட்டி – காலி 

அவுஸ்திரேலிய A அணியின் போட்டிகள் 

ஜூன் 8 – முதல் ஒருநாள் போட்டி – கொழும்பு 

ஜூன் 10 – இரண்டாவது ஒருநாள் போட்டி – கொழும்பு

ஜூன் 14-17 – முதலாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – ஹம்பாந்தோட்டை

ஜூன் 21-24 – இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – ஹம்பாந்தோட்டை

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<