ஆஸி. அணியின் வலைப் பந்துவீச்சாளராக மாறிய UAE வீரர்

616
Australia Net Sessions
©Espncricinfo

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஏஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவுஸ்திரேலிய அணி தங்களுடைய வலை பந்துவீச்சாளராக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அஹமட் ரெஷாவை அழைத்துள்ளது.

ஏஷஸ் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கோஹ்லியின் சாதனையுடன் இந்திய அணிக்கு வெற்றி

இந்திய அணியின் ஐக்கிய அமெரிக்கா மற்றும்…

இந்தப் போட்டிக்கான பயிற்சியில் அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டு வரும் நிலையில், தங்களுடைய வலை பந்துவீச்சாளராக ஐக்கிய அரபு அமீரகத்தின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அஹமட் ரெஷாவை அழைத்திருக்கிறது.

அவுஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு சுழல் பந்துவீச்சாளரான நெதன் லையோன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். 

எனினும், இங்கிலாந்து அணி சார்பாக விளையாடியிருந்த சுழல் பந்துவீச்சாளர்களான ஜோ டென்லி மற்றும் மொயீன் அலி ஆகியோர் எந்த வித அழுதத்தினையும் அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கவில்லை. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட்  போட்டிக்கான குழாத்தில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஜெக் லீச்சை இங்கிலாந்து அணி இணைத்துக்கொண்டுள்ளதுடன், மொயீன் அலியை குழாத்திலிருந்து நீக்கியுள்ளது. 

இந்தநிலையில், ஜெக் லீச்சின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொள்ளும் முகமாக அதே பாணியில் பந்துவீசக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் சுழல் பந்துவீச்சாளரான அஹமட் ரெஷாவை அவுஸ்திரேலிய அணி அழைத்துள்ளது. அஹமட் ரெஷாவை பொருத்தவரையில், முக்கியமாக ஆஸி. அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா…

கடந்த காலங்களில் ஸ்டீவ் ஸ்மித் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தார். குறிப்பாக துணைக் கண்டங்களில் விளையாடும் போது, இலங்கை அணியின் ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை எதிர்கொள்வதற்கு ஸ்டீவ் ஸ்மித் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தார். அதனால், ஸ்மித்தின் துடுப்பாட்ட பயிற்சிக்காக இம்முறை ரெஷா அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<