வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 13

1555
Srilanka Cricket

1968ஆம் ஆண்டு – சந்திக்க ஹதுருசிங்ஹ பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் மற்றும் பங்களாதேஷ் அணியின் பயிற்சிவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்ஹவின் பிறந்த தினமாகும்.
முழுப் பெயர் : உபுல் சந்திக்க ஹதுருசிங்ஹ

  • பிறப்பு : 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி
  • பிறந்த இடம் : கொழும்பு
  • வயது : 48
  • விளையாடிய காலப்பகுதி : 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
  • கல்வி : பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவ
    விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 35
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 669
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 66
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 20.90
    விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 26
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 1274
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 83
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 29.62
    பந்துவீச்சில் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான சந்திக்க ஹதுருசிங்ஹ ஒருநாள் போட்டிகளில் 25 இனிங்ஸ்களில் பந்துவீசி 50.64 என்ற பந்துவீச்சு சராசரியில் 14 விக்கட்டுகளையும், டெஸ்ட்  போட்டிகளில் 32 இனிங்ஸ்களில் பந்துவீசி 46.41 என்ற பந்துவீச்சு சராசரியில் 17 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 12


1969ஆம் ஆண்டு – ஷேன் வோர்ன் பிறப்பு
உலக டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் இலங்கை அணியை சேர்ந்த முத்தையா முரளிதரனிற்குப் பிறகு 2ஆம் இடத்தில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்குரிய அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் கிரிக்கட் வர்ணனையாளரான ஷேன் வோர்னின் பிறந்த தினமாகும்.
முழுப் பெயர் : ஷேன் கீத் வோர்ன்

  • பிறப்பு : 1969ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி
  • பிறந்த இடம் : விக்டோரியா
  • வயது : 47
  • விளையாடிய காலப்பகுதி : 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : வலதுகை சுழற்பந்து வீச்சு
  • புனைப் பெயர் – வோர்னி
  • உயரம் : 1.83 மீற்றர்
    விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 194
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 293
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 33/5
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 25.73
    விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 145
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 708
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 71/8
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 25.41
    துடுப்பாட்டத்தில் ஷேன் வோர்ன் ஒருநாள் போட்டிகளில் 13.05 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1018 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் 55 ஓட்டங்களாகும். ஒருநாள் போட்டிகளில் ஷேன் வோர்ன் 1 அரைச் சதத்தை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வோர்ன் 17.32 என்ற துடுப்பாட்ட சராசரியில் 3154 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் 99 ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் வோர்ன் 12 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 10


செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1863ஆம் ஆண்டு – வில்லிஸ் கட்டெல் (இங்கிலாந்து)
  • 1939ஆம் ஆண்டு – செசில் மார்ஷல் (கனடா)
  • 1963ஆம் ஆண்டு – ரொபின் ஸ்மித் (தென் ஆபிரிக்கா)
  • 1975ஆம் ஆண்டு – ரியான் ஹர்லி (மேற்கிந்திய தீவுகள்)
  • 1976ஆம் ஆண்டு – கிரேக் மெக்மிலன் (நியுசிலாந்து)
  • 1979ஆம் ஆண்டு – மொஹமத் அய்யூப் (பாகிஸ்தான்)
  • 1982ஆம் ஆண்டு – டொனோவென் பகோன் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1988ஆம் ஆண்டு – ஸ்டீவன் ஜேகப்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1992ஆம் ஆண்டு – பாரி மெக்கார்த்தி (அயர்லாந்து)
  • 1993ஆம் ஆண்டு – பென் கொட்டன் (இங்கிலாந்து)