அபு தாபியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஆசியக்கிண்ணம்!

Asia Cup 2022

199

ஆசியகிண்ணத்தொடருக்கான வெற்றிக்கிண்ணம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் சகிப்புத்தன்மை, சகவாழ்வு அமைச்சர் மற்றும் கிரிக்கெட் சபை தலைவருமான செயிக் நஹாயன் முபாரக் அல் நஹாயனால் நேற்றைய தினம் (19) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் இணையும் வனிந்து ஹஸரங்க

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஆசியக்கிண்ணத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், கிண்ணத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் அபு தாபியில் நடைபெற்றது.

குறிப்பிட்ட இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் பொதுசெயலாளர் முபாஷிர் உஸ்மானி, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் ஆலோசகர் சுபான் அஹ்மட், ஆசிய கிரிக்கெட் சபையின் நிதி மற்றும் செயல்பாடுள் தலைவர் துஷித் பெரேரா மற்றும் நிகழ்வுகள் மற்றும் வணிகத் தலைவர் பிரபாகரன் தன்ராஜ் ஆகியோர் பங்குற்றிருந்தனர்.

ஆசியக்கிண்ணத்தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இம்முறை தொடர் T20I போட்டிகளாக நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்தும் ஷார்ஜா, டுபாய் மற்றும் அபு தாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<