போராட்டங்களின் பின் சமனிலையாகிய ஏஷஸின் இரண்டாவது டெஸ்ட்!

155
ICC

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 14ம் திகதி ஆரம்பமாகவிருந்த, ஏஷஸ் தொடருக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முழுவதும் மழை குறுக்கிட்டதன் காரணமாக நாணய சுழற்சியின்றி முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இலங்கையுடனான டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த டிம் சௌத்தி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக….

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் ஓட்டங்களை குவிப்பதற்கு இங்கிலாந்து அணி தடுமாறிய போதும், ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோரின் அரைச் சதங்கள் இங்கிலாந்து அணிக்கு வலுவளித்திருந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோரி பேர்ன்ஸ் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களை கொண்டு ஆட்டத்தை நகர்த்திய பெயார்ஸ்டோவ் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களை தவிர க்ரிஸ் வோர்க்ஸ் 32 ஓட்டங்களையும், ஜோ டென்லி 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், பெட் கம்மின்ஸ், நெதன் லயன் மற்றும் ஜோஸ் ஹெஷல்வூட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் பகிர்ந்தனர். 

பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றம் வழங்கியிருந்த போதும், ஜொப்ரா ஆர்ச்சரின் பௌண்சர் பந்தின் மூலம் தாக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த உதவியிருந்தார்.

குறிப்பாக, ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆர்ச்சர் வீசிய பௌண்சர் பந்தொன்று அவரது கழுத்து பகுதியை கடுமையாக தாக்கியிருந்தது. இதில், நிலைகுழைந்த ஸ்மித் பெவிலியன் திரும்பினார். எனினும், அணிக்காக மீண்டும் துடுப்பெடுத்தாடிய அவர், 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இவருக்கு அடுத்தப்படியாக உஸ்மான் கவாஜா 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஸ்டுவர்ட் புரோட் 4 விக்கெட்டுகளையும், க்ரிஸ் வோர்க்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

காலி ஆடுகளம் பற்றி அதிர்ச்சியை வெளியிடும் கேன் வில்லியம்சன்

காலி சர்வதேச அரங்கில் இதற்கு முன்னர்….

இதன் பின்னர், 8 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநிறைவின் போது 96 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியிருந்தது. ஆனாலும், இன்றைய தினம் தேநீர் இடைவேளைக்கு முன்னர் தங்களுடைய இன்னிங்ஸை நிறைவுசெய்து 5 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. அத்துடன், முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் 267 ஓட்டங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காகவும் நிர்ணியிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும் பென் ஸ்டோக்ஸ், பெயார்ஸ்டோவ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்திருந்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் 115 ஓட்டங்களையும், பெயார்ஸ்டோவ் 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, பட்லர் 31 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், பீட்டர் சிட்ல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி, குறுகிய இடைவேளைக்குள் 267 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்துக்கு மத்தியில், 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இதன்காரணமாக இந்தப் போட்டியானது சமநிலையில் நிறைவு பெறுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு….

போட்டியின் சிறப்பம்சமாக ஐசிசியின் புதிய விதிமுறைப்படி உபாதையால் ஒரு வீரர் வெளியேறினால், அவருக்கு பதிலாக மேலதிக வீரராக செயற்படும் வீரர் களத்தடுப்பில் மாத்திரமின்றி, துடுப்பெடுத்தாடவும், பந்துவீசவும் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்றைய தினம் ஸ்டீவ் ஸ்மித் விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக விளையாடிய மார்னஸ் லெபுசெங் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் (59 ஓட்டங்கள்) கடந்தார். 

அவருக்கு அடுத்தப்படியாக ட்ராவிஷ் ஹெட் 42 ஓட்டங்களை பெற்றிருந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்தனர். 

இதேவேளை, ஏஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்ததால், அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் 1-0 என தொடரில் முன்னிலையில் வகிக்கின்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி, எதிர்வரும் 22ம் திகதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 258/10, ரோரி பேர்ன்ஸ் 53, ஜொனி பெயார்ஸ்டோவ் 52, ஜோஸ் ஹெஷல்வூட் 58/3, பெட் கம்மின்ஸ் 61/3

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 250/10, ஸ்டீவ் ஸ்மித் 92, உஸ்மான் கவாஜா 36, ஸ்டுவர்ட் புரோட் 65/4, க்ரிஸ் வோர்க்ஸ் 61/3

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 258/5d, பென் ஸ்டோக்ஸ் 115, ஜோஸ் பட்லர் 31, பெட் கம்மின்ஸ் 35/3, பீட்டர் சிட்ல் 54/2

அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 154/6, மார்னஸ் லெபுசெங் 59, ஜொப்ரா ஆர்ச்சர் 32/3, ஜெக் லீச் 37/3

முடிவு – போட்டி சமனிலை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<