பங்களாதேஷின் கிரிக்கெட் அணிகளுக்கு புதிய தலைவர்கள்

0

இந்திய சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் அணியின் தலைவராக மொமினுல் ஹக் நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, பங்களாதேஷ் T20 அணியின் தலைவராக மஹமதுல்லா ரியாத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.  

பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் T20 அணிகளின் தலைவரான சகீப் அல் ஹசன் சூதாட்ட தரகர் ஒருவர் தன்னை அணுகிய விடயத்தினை ஐ.சி.சி. இடம் தெரிவிக்க மறுத்த நிகழ்வு காரணமாக இரண்டு வருடத் தடையினை பெற்றிருக்கின்றார். இதன் காரணமாகவே, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

கிரிக்கெட் ஊழல் விவகாரத்தில் ஷகீப் அல் ஹசனுக்கு தடை

ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதி மீறல் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை …..

அதேநேரம், இந்திய சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள T20i போட்டிகளின் போது பங்களாதேஷ் அணிக் குழாத்தில் இன்னும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) உறுதி செய்திருக்கின்றது. அதன்படி, அபு கைதர் ரோனி, காயமடைந்த வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சயீபுத்தினின் இடத்தினை எடுப்பதோடு, சொந்த காரணங்களுக்காக இந்திய தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் இருந்து விலகிய தமிம் இக்பாலிற்குப் பதிலாக மொஹமட் மிதுன் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். 

அதேவேளை சகீப் அல் ஹசனின் இடத்திற்காக, இந்திய அணிக்கு எதிரான T20 போட்டிகளின் போது இடதுகை சுழல்வீரரான தய்ஜூல் இஸ்லாம் வருகின்றார். தய்ஜூல் இதுவரையில் இரண்டு T20 சர்வதேச போட்டிகள் மாத்திரமே ஆடிய அனுபவத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் T20 குழாம் 

சௌம்யா சர்க்கார், மொஹமட் நயீம், மஹமதுல்லா (அணித்தலைவர்), அபிப் ஹொசைன், மொசாதிக் ஹொசைன், எனிமுல் இஸ்லாம், லிடன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், அரபாத் சன்னி, அல்  அமின் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம், அபு கைதர் ரோனி, மொஹமட் மிதுன், தய்ஜூல் இஸ்லாம்

இந்திய சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் 20 வயது நிரம்பிய அறிமுக துடுப்பாட்ட வீரரான சயீப் ஹஸனிற்கு முதல் தடவையாக பங்களாதேஷ் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவரையில் 36 முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்கும் சயீப் ஹஸன் 46.18 என்கிற துடுப்பாட்ட சராசரியினை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், 2014ஆம் ஆண்டே கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அல் அமின் ஹொசைனும், பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றிருக்கின்றார். 

Video – சகீபின் தடையினால் உலகக் கிண்ணத்தில் தடுமாறுமா பங்களாதேஷ்?

சர்வதேச கிரிக்கெட் வாரியம் பங்களாதேஷ் ………

இவர்கள் தவிர நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் பின்னர் பங்களாதேஷ் அணியில் ஆடாத எபாதத் ஹொசைன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்திற்குள் மீண்டிருக்கின்றனர்.

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் 

சாத்மன் இஸ்லாம், இம்ருல் கைஸ், சயீப் ஹஸன், மொமினுல் ஹக் (அணித்தலைவர்), லிடன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மஹமதுல்லா, மொஹமட் மிதுன், மொசாதிக் ஹொசைன், மெஹிதி ஹஸன் மிராஜ், தய்ஜூல் இஸ்லாம், நயீம் ஹஸன், முஸ்தபிசுர் ரஹ்மான், அல் அமின் ஹொசைன், எபாதத் ஹசன்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் நவம்பர் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறுகின்றது. T20 தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதோடு, குறித்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாகவும் அமைகின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<