IPL 2024 தொடரில் ஆடவிருக்கும் ரிசாப் பாண்ட்

81

மிகப் பெரும் உபாதை ஒன்றுக்கு முகம் கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரிசாப் பாண்ட் 2024ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) 2024 தொடரிலிருந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கை – ஜிம்பாப்வே போட்டி அட்டவணையில் மாற்றம்

கடந்த ஆண்டு மிகப் பெரும் கார் விபத்தொன்றில் சிக்கிய ரிசாப் பாண்ட் சத்திரசிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, அதன் காரணமாக இந்திய அணி உலகக் கிண்ணம் அடங்கலாக 2023ஆம் ஆண்டில் விளையாடிய அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் பங்கெடுக்கும் வாய்ப்பினை இழந்திருந்தார்.

இவ்வாறாக விடயங்கள் இருக்க கடந்த பருவத்திற்கான IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியினை வழிநடாத்தும் வாய்ப்பினையும் இழந்த ரிசாப் பாண்ட் தற்போது உடல்நிலை தேறி வரும் நிலையிலையே அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் எப்போது ஆடுவார் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்திடம் வீழ்ந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

தற்போது பெங்களூருவில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் (NCA) தனது உடல்நிலையை மறுசீரமைக்கும் (Rehabilitation) பணிகளில் ஈடுபட்டு வரும் ரிசாப் பாண்ட், பெப்ரவரி மாதமளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கான பூரண உடற்தகுதியினைப் பெறுவார் நம்பப்படுகின்றது. எனவே குறித்த சந்தர்ப்பத்தில் தேசிய கிரிக்கெட் அகடமியின் ஆலோசகர்களின் அறிவுரைக்கு அமைய IPL தொடர் மூலம் ரிசாப் பாண்ட் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது உறுதி செய்யப்படும்.

இதேவேளை ரிசாப் பாண்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை மீண்டும் பெறுகின்ற போதிலும் அவர் விக்கெட்காப்பில் ஈடுபடுவதில் சந்தேகம் நிலவுகின்றது. 26 வயது நிரம்பிய  ரிசாப் பாண்ட் மீண்டும் IPL போட்டிகளின் மூலம் கிரிக்கெட்டுக்கு மீள் வருகை தரும் போது டெல்லி கெபிடல்ஸ் அணியினை முன்வரிசை துடுப்பாட்டவீரராகவும், அணித்தலைவராகவும் மாத்திரமே செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<