PSL தொடரில் சகலதுறையிலும் பிரகாசித்த திசர பெரேரா

Pakistan Super League 2021

197

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேரா சகலதுறையிலும் பிரகாசித்துள்ளார்.

சகலதுறை வீரரான திசர பெரேரா, கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் கராச்சி கிங்ஸ் அணி, பேஸ்வர் ஷல்மி அணியை எதிர்த்தாடியது.

LPL 2021 தொடர் நடைபெறும் இடம் உறுதியானது

கடந்த போட்டிகளில் கராச்சி அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த திசர பெரேரா, நேற்றைய தினம் களமிறக்கப்பட்டிருந்தார். இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கராச்சி அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பாபர் அஷாமுடன், சிறந்த இணைப்பாட்டமொன்றை வழங்கினார்.

பாபர் அஷாம் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, திசர பெரேரா  வெறும் 18 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்தார். அதுமாத்திரமின்றி இந்த ஓட்ட எண்ணிக்கைக்காக 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளையும் விளாசினார்.  இவரின் இந்த துடுப்பாட்ட உதவியுடன் கராச்சி கிங்ஸ் அணி 175 ஓட்டங்களை  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

பின்னர், பேஸ்வர் ஷல்மி அணி வெற்றியிலக்கை நோக்கி சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் பகிர்ந்தது.  இதில், அபாரமாக ஆடிய ஹஷரதுல்லாஹ் ஷஷி 77 ஓட்டங்களை பெற்றிருந்த போது, பந்துவீசிய திசர பெரேரா அவரை ஆட்டமிழக்க செய்தார். அத்துடன், தன்னுடைய முதல் ஓவரில் இமாம் உல் ஹக்கையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

திசர பெரேரா துடுப்பாட்டத்தில் 37 ஓட்டங்களையும், பந்துவீச்சில் இரண்டு ஓவர்களில் 10 ஓட்டங்களை கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். எனினும், பேஸ்வர் ஷல்மி அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<