இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இவர்தான்

211
Anil Kumble appointed India head coach
@BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இருந்து இறுதியாக 21பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களிடம் கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலி, சச்சின், லஷ்மண்) நேர்காணல் நடத்தியது. நேற்று முன்தினமும் நேற்றும் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோரிடம் இறுதிக்கட்ட நேர்காணல் நடத்தியது.

பின்னர், யாரை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற பரிந்துரையை பி.சி.சி..க்கு அனுப்பி வைத்தது. இதன் அடிப்படையில் இன்று மாலை 6 மணியளவில் பி.சி.சி.. தலைவர் அனுராக் தாகூர் தலைமைப் பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது ‘‘கும்ப்ளே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஒரு வருடமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.