ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷுக்கு ‘வைட்வொஷ்’ தோல்வி

649
Image Courtesy - AFP

கடைசி பந்துவரை பரபரப்பூட்டிய ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவதும் கடைசியுமான டி-20 போட்டியில் 1 ஓட்டத்தால் தோல்வியடைந்த பங்களாதேஷ் அணி இந்த தொடரை சங்கடமான முறையில் முழுமையாக இழந்தது.

இந்தியாவின் டெஹ்ரதுனில், வியாழக்கிழமை (07) நடைபெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி கடைசி பந்தில் 4 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் ரஷீத் கான் வீசிய பந்துக்கு ஆரிபுல் ஹக் மைதானத்திற்கு மேலால் பந்தை உயர்த்தி அடித்தார்.

ரஷீத் கானின் மாய சுழலோடு பங்களாதேஷ் உடனான T20 தொடர் ஆப்கான் வசம்

நேற்று (05) நடைபெற்று நடைபெற்று முடிந்திருக்கும்..

அந்த பந்து சிக்ஸரை நோக்கி பறப்பது போல் தெரிந்தது. ஆனால் லோங்ஓன்  திசையில் இருந்த ஷபிகுல்லாஹ் ஷபீக் பௌண்டரி எல்லைக்கோட்டுக்கு வெளியே விழுந்தபடி பந்தை தட்டிவிட அதனை பெற்ற மொஹமது நபி விக்கெட்டை நோக்கி வீச மூன்றாவது ஓட்டத்தை பெற முயன்ற மஹ்மூதுல்லாஹ்வை ரன் அவுட் செய்ய முடிந்தது.

இந்த த்ரில்லான போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களையே பெற்றது.

ஆப்கான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மொஹமது ஷஹ்சாத் (26) மற்றும் உஸ்மான் கானி (19) இருவரும் 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது அந்த அணிக்கு ஸ்திரமான ஓட்டங்களை பெறுவதற்கு உதவியது. எனினும் இந்த இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் ஆப்கான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் மூன்று சிக்ஸர்களை விளாசி 17 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றதோடு சமியுல்லாஹ் ஷன்வாரி ஆட்டமிழக்காது 28 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.  

கனடா குளோபல் டி20 லீக்கில் ஆறு இலங்கை வீரர்கள்

கனடா கிரிக்கெட் சபையினால் முதற்தடவையாக ஏற்பாடு..

ஏற்கனவே தொடர் தோல்வியை சந்தித்த பங்களாதேஷ் அணி எட்ட முடியுமான இந்த வெற்றி இலக்கை தடுமாற்றத்துடனேயே ஆரம்பித்தது. முஜிபுர் ரஹ்மான் மற்றும் நபியின் சூழற்பந்துக்கு பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒருமுறை தடுமாற்றம் கண்டனர்.  

லிடோன் தாஸ் (12) மற்றும் சௌம்யா சர்கார் (15) இருவரும் இரண்டு பந்து இடைவெளியில் ஒரே மாதிரியாக ரன் அவுட் ஆக ஆப்கான் அணி நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது.  

ஆனால், முஷ்பிகுர் ரஹிம் (37 பந்துகளில் 46 ஓட்டங்கள்) மற்றும் மஹ்முதுல்லாஹ் (38 பந்துகளில்  45 ஓட்டங்கள்) ஐந்தாவது விக்கெட்டுக்கு 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று பங்களாதேஷ் அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர்.  

கடைசி இரண்டு ஓவர்களுக்கும் வெற்றி பெற 30 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது முஷ்பிகுர் தொடர்ச்சியாக ஐந்து பௌண்டரிகள் விளாசி சாகசம் நிகழ்த்தினார். இதனால் 19 ஆவது ஓவரை வீசிய கரிம் ஜனட் 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளுக்கும் 9 ஓட்டங்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் அந்த ஓவரை வீசிய உலகின் முதல் நிலை டி-20 பந்துவீச்சாளரான ரஷீத் கான் அந்த ஓவரின் முதல் பந்திலேயே முஷ்பிகுர்ரை ஆட்டமிழக்கச் செய்ததோடு அடுத்த பந்துகளில் பௌண்டரிகள் செல்லாமல் பார்த்துக்கொண்டார்.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின்…

இதனால் பங்களாதேஷ் அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 144 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய ஆப்கான் அணியால் த்ரில் வெற்றி ஒன்றை பெற முடிந்தது.

பங்களாதேஷ் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு, தொடர் நாயகன் விருது அசைக்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக மாறி வரும் ரஷீத் கானுக்கு கிடைத்தது.

இந்த தொடரின் முதல் போட்டியில் 45 ஓட்டங்களால் தோற்ற பங்களாதேஷ் அணி முக்கியமான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 145/6 (20) – சமியுல்லாஹ் ஷன்வாரி 33*, அஸ்கர் ஸ்டனிக்சாய் 27, மொஹமது ஷஹ்சாத் 26, நஸ்புல் இஸ்லாம் 2/18, அபூ ஜயத் 2/27

பங்களாதேஷ் 144/6 (20) – முஷ்பிகுர் ரஹிம் 46, மஹ்முதுல்லாஹ் 45, ரஷீத் கான் 1/24, மஜீபுர் ரஹ்மான் 1/25

முடிவு ஆப்கானிஸ்தான் 1 ஓட்டத்தால் வெற்றி