ஆப்கான் வீரர்கள் மூவருக்கு லீக் தொடர்களில் ஆடும் வாய்ப்பு கேள்விக்குறி

171

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) ஆப்கான் கிரிக்கெட் வீரர்களான முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகிய மூவருக்கும் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் ஆடுவதற்கான ”ஆட்சேபனையின்றிய சான்றிதழை (No Objections Certificate)” அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை – ஜிம்பாப்வே தொடர்களுக்கான டிக்கட் விபரம் வெளியானது

அந்தவகையில்தேசிய கிரிக்கெட் அணியில் ஆடுவதில் கவனம் செலுத்தாது சொந்த விருப்புகளை முன்னிலைப்படுத்தல்என்னும் காரணத்தினை பிரதானமாக குறிப்பிட்டே ஆப்கான் கிரிக்கெட் சபை குறித்த மூன்று வீரர்களுக்கும்ஆட்சேபனையின்றிய சான்றிதழை (No Objections Certificate)” அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் வழங்க மறுப்புத் தெரிவித்திருப்பதாக இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

குறிப்பிட்ட மூன்று வீரர்களும் அண்மையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தங்களை 2024ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்குமாறும், தங்களை வெளிநாட்டு லீக்குகளில் ஆடுவதற்கு சம்மதம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகின்றது.   

இந்த நிலையில் இந்த வீரர்களின் விடயங்கள் குறித்து ஆராய நியமிக்கப்ட்ட குழு வழங்கிய பரிந்துரைக்கு அமையவே குறித்த வீரர்களுக்கு  ஆட்சேபனையின்றிய சான்றிதழ் வழங்க மறுக்கப்படுவதோடு தற்போது வீரர்களுக்கு வெளிநாட்டு லீக்குகளில் ஆட வழங்கப்பட்ட ஆட்சேபனையின்றிய சான்றிதழ்களும் மறுபரிசீலனை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வீரர்களுக்கு வழங்கவிருக்கும் தேசிய வீரர் ஒப்பந்தங்களும் தாமதம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது. 

இங்கிலாந்து அணியுடன் இணையும் கீய்ரோன் பொலார்ட்

இந்த வீரர்களுக்கான ஆட்சேபனையின்றிய சான்றிதழ் மறுப்பு தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் மூன்று வீரர்களும் பணம் கொழிக்கும் லீக் தொடரான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. இந்த வீரர்களில் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் நிறைவடைந்த IPL வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினால் கொள்முதல்  செய்யப்பட்டிருந்ததோடு, நவீன் உல் ஹக் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி மூலமும் பசால்ஹக் பரூக்கி ஹைதரபாத் சன்ரைஸர்ஸ் அணி மூலமும் தக்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<