கிரிக்கெட் நடுவரால் முழு கிராமத்துக்கும் Coverage வசதி

186

ஊரடங்கு காலப்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சி நடுவர் அனில் சவுத்ரி, குடும்பத்தாருடன் தொலைபேசியில் கதைப்தற்காக சுமார் அரை கிலோமீற்றர் சென்று மரத்தில் ஏறிய சம்பவம் அறிந்து இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று அந்தக் கிராமத்துக்குச் சென்று தொலைபேசி Coverage வசதியை பெற்றுக் கொடுப்பதற்காக தொலைத்தொடர்பு (Network Tower) கோபுரமொன்றை அமைத்துக் கொடுத்துள்ளது.  

கைத்தொலைபேசியில் கதைக்க மரத்தின் உச்சிக்கு சென்ற ஐ.சி.சி நடுவர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 23ஆம் திகதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவைச் சேர்ந்த .சி.சியின் சர்வதேச கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பூர்விக கிராமமான ஷல்மி மாவட்டத்தின் டங்ரோல் எனப்படுகின்ற அவரது சொந்த கிராமத்திற்கு இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார்

எனவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அனில் சவுத்ரிக்கு குடும்பத்தாருடன் குறித்த கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.  

இந்த நிலையில், டெல்லியில் உள்ள குடும்பத்தாருடம் கதைப்பதற்கு அழைப்பினை எடுத்தபோதுதான், அந்த கிராமத்தில் தொலைபேசி Coverage கிடைக்காது என்பது அவருக்கு தெரியவந்தது. மேலும், Coverage கிடைக்க சுமார் அரை கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123

இதனையடுத்து விவசாய நிலத்திற்குள் சுமார் அரை கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது கைத்தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதற்கான Coverage கிடைத்துள்ளது. அதன்பின் தனது குடும்பத்தினருடம் சவுத்ரி கதைத்துள்ளார்

இந்த செய்தியானது இந்தியாவின் டைம்ஸ் எகொனமிக்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானது.  

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த கிராமத்தில் தொலைபேசி இணைப்பு கோபுரமொன்றை அமைத்து கொடுத்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் விவசாய நிலத்திற்குச் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து கைத்தொலைபேசியில் கதைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது

மறுபுறத்தில், கொரோனா வைரஸ் காரணமாக அப்பகுதியில் இணையத்தளம் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் எளிதாக பாடம் கற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்தக் கிராம மக்கள் அனில் சவுத்ரியை ஒரு ஹீரோவாகவும், மண்ணின் மைந்தனாகவும் அழைப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய வீரர்களுக்கு துபாயில் பயிற்சி

இதுதொடர்பில் அனித் சவுத்ரி அளித்த பேட்டியில், இந்த முயற்சி என்னுடைய கிராமத்திற்கு பயனளிக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஜலந்தரில் உள்ள பேராசிரியர் ஒருவரால் இணையத்தளம் மூலம் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்

ஏனென்றால், அவர்கள் இனிமேல் விவசாய நிலங்களில் கொசுக்கடிக்கிடையே இணைய வழி வகுப்புகளில் பங்குகொள்ள தேவையில்லை. வீட்டில் இருந்து இணையத்தளம் மூலம் வகுப்புகளில் பங்கேற்கலாம்.  

தற்போது அங்குள்ள மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க கேட்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் நான் வெறும் நடுவர் மட்டுமே என்று தெரிவித்துவிட்டேன்” என்று அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<