இந்திய வீரர்களுக்கு துபாயில் பயிற்சி

2021
 

இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கு முன் இந்திய அணி வீரர்களுக்கு துபாயில் பயிற்சி முகாமொன்றை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையுடன் இணைந்து .பி.எல் போட்டித் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“சிறந்த வீரர்களை அணிக்கு விட்டுச்செல்லாதவர் டோனி” – கம்பீர்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ரசிகர்கள் இல்லாமல் ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஆசிய கிரிக்கெட் பேரவை கடந்த வாரம் அறிவித்தது. இதன்காரணமாக .பி.எல் தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்தது

இதேவேளை, டி20 உலகக் கிண்ணத்தை ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகும் என சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதுதொடர்பில் .சி.சி எந்தவொரு அறிவிப்பினை வெளியிடாவிட்டாலும், தொடரை நடத்தும் அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் டி20 உலகக் கிண்ணம் இரத்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123

இதுஇவ்வாறிருக்க, இவ்வருடம் .பி.எல் போட்டிகள் நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி ஷ்டம் ஏற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதிலும் குறிப்பாக, அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்துக்கு பெருத்த ஷ்டம் ஏற்படும் என்பதால் எப்படியாவது .பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனிடையே, .பி.எல் தொடரை இந்தியா அல்லது இலங்கையில் நடத்துவதை விட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதனால், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி முகாமொன்றை துபாயில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

துபாயில் உள்ள .சி.சியின் பயிற்சி மையத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் ஏற்கனவே தங்களது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

DRS முறைமைக்கு எதிராக மீண்டும் கருத்து வெளியிட்ட சச்சின்

எனவே, இம்மாதம் இறுதியில் இந்திய அணி வீரர்களின் பயிற்சிகள் ஆரம்பமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை .பி.எல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், மும்பையில் கொரோனா வைரஸ் குறையாத பட்சத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் .பி.எல் தொடரை நடத்துவதற்கு நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.இதுகுறித்த இறுதி அறிவிப்பு நாளை நடைபெறவுள்ள பிசிசிஐ இன் விசெட நிருவாக சபை கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

2014-ல் ஏற்கெனவே .பி.எல் போட்டிகளின் ஒருபகுதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க