சிடி லீக் தலைவர் கிண்ணம்; முதல் வார போட்டிகள் சமநிலையில் நிறைவு

City Football League President Cup 2023

444

கொழும்பு சிடி கால்பந்து லீக் ஏற்பாடு செய்து நடாத்தும் ஆறாவது சிடி லீக் தலைவர் கிண்ண கால்பந்து தொடர் 2023இன் முதல் வாரப் போட்டிகள் இரண்டும் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளன.

சோண்டர்ஸ் வி.க எதிர் ஜாவா லேன் வி.க

சிடி கால்பந்து லீக் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் முதல் பாதி நிறைவடையும் நேரத்தில் டிலான் கௌஷல்ய மூலம் சோண்டர்ஸ் அணி போட்டியின் முதல் கோலைப் பெற்று முன்னிலையடைந்தது.

தொடர்ந்த இரண்டாம் பாதியில் 63ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மாலக பெரேரா கோலாக்க, 71ஆவது நிமிடத்தில் மொஹமட் சப்ரான் அடுத்த கோலையும் பெற, ஜாவா லேன் அணியினர் 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

எனினும், ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் வீரர் சுந்தராஜ் நிரேஷ் அவ்வணிக்கான இரண்டாவது கோலையும் பெற, ஆட்டம் 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவு பெற்றது.

கொழும்பு கா.க எதிர் மொறகஸ்முல்ல வி.க

ஞாயிற்றுக்கிழமை (18) அதே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது. எனினும் இரண்டாம் பாதியின் 68ஆவது நிமிடத்தில் தனன்ஜய பெனால்டி மூலம் மொறகஸ்முல்ல அணிக்கான கோலைப் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் கொழும்பு அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சர்வான் ஜோஹர் கோலாக்கினார். எனவே, நிறைவில் தலா ஒரு கோல்கள் கணக்கில் போட்டி சமநிலையடைந்தது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<