மேஜர் T-20 லீக்கில் லஹிரு உதார அரைச்சதம்: 5 விக்கெட்டுக்களை எடுத்த ரொஸ்கோ

88
 

உள்ளூர் கழக மட்டத்தில் உள்ள திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்துள்ள முதல்தர கழகங்களுக்கிடையிலான இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது நாளான இன்று (05) எட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. 

இதில், NCC கழகத்துக்காக லஹிரு உதார அரைச்சதம் அடித்து அசத்த, நீர்கொழும்பு கழகத்துக்காக ரொஸ்கோ டட்டில் ஐந்து விக்கெட்டுக்களை எடுத்து மிரள வைத்தார்

NCC கழகம் எதிர் துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 

இலங்கை துறைமுக அதிககார சபை அணிக்கு எதிராக CCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் NCC கழகம் வெற்றிபெற்றது

ப்ரீமியர் லீக் T20 தொடரின் முதல் நாளில் அசத்திய சதீர, ப்ரியமால் மற்றும் தனஞ்சய லக்ஷான்

NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய லஹிரு உதார, ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை எடுத்தார். இதில் 3 சிக்ஸர்களும், 8 பௌண்டரிகளும் அடங்கும்

இம்முறை போட்டித் தொடரில் NCCகழகம் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட இரண்டாவது வெற்றி இதுவாகும்.

போட்டியின் சுருக்கம்

துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 115/8 (20) – யொஹான் டி சில்வா 33, இரோஷ் சமரசூரிய 20, சதுரங்க டி சில்வா 2/16, சாமிக கருணாரத்ன 2/23

என்சிசி கழகம் – 119/2 (15.1) – லஹிரு உதார 65*, அஞ்சலோ பெரேரா 27, கமில் மிஷார 22*

முடிவு – என்சிசி கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம் 

கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம் நடைபெற்றிருந்த இப்போட்டியில், 47 ஓட்டங்களால் இலகு வெற்றியொன்றை நீர்கொழும்பு கிரி;க்கெட் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

பந்துவீச்சில் நீர்கொழும்பு அணியின் ரொஸ்கோ டட்டில் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்ததியிருந்தார்.

பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!

இதன்படி, T20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்ட ரொஸ்கோ, முதல்தடவையாக ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 172/6 (20) – மாதவ வர்ணபுர 42, அஷேன் சில்வா 40, டில்ஷான் முனவீர 39, சமீர திஸாநாயக்க 2/27, துவிந்து திலகரட்ன 2/27

BRC – 125/9 (20) – லியோ ப்ரான்சிஸ்கோ 26, லஹிரு சமரகோன் 24, ரொஸ்கோ டட்டில் 5/23, ரொஷேன் பெர்னாண்டோ 2/13, மாதவ வர்ணபுர 2/20

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 47 ஓட்டங்களால் வெற்றி 

களுத்துறை நகர கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியை, அபார பந்துவீச்சின் மூலமாக சிலாபம் மேரியன்ஸ் கழகம் வெற்றி கொண்டது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய களுத்துறை நகர கழகம் 111 ஓட்டங்களைப் பெற்றதுடன், சிலாபம் மேரியன்ஸ் கழகம் 112 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றயீட்டியது.

இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் லசித் மாலிங்க?

முன்னதாக, குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் – 111/9 (20) – கிஷான் விமலதர்ம 53, புலின தரங்க 2/13, திக்ஷில டி சில்வா 2/26

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 112/3 (16.1) – திக்ஷில டி சில்வா 38, லசித் குரூஸ்புள்ளே 33, தேனுவன் ராஜகருணா 2/24, மிதுன் ஜயவிக்ரம 2/25 

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம் 

பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியை, ஷி தேவ்வின் அபார பந்துவீச்சின் மூலமாக கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் வெற்றிக்கொண்டது

போட்டியின் சுருக்கம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 158/8 (20) – ஆகில் இன்ஹாம் 38, சம்பத் பெரேரா 33, ரிஷி தத்வாஜ் 27, நிமன்த சுபசிங்க 2/29

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 154/9 (20) – டி.எம் சம்பத் 43, நிம்னத சுபசிங்க 23, ரவிந்து ரத்னாயக்க 22, சந்துன் வீரக்கொடி 21, கமிந்து கனிஷ் 21, இஷித தேவ் 4/15, சச்சித்ர பெரேரா 2/23

முடிவு – கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களால் வெற்றி 


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

(CCC மைதானம்)

லங்கன் கிரிக்கெட் கழகம் – 137/6 (20) – ஹர்ஷ குரே 59, சாலிய சமன் 28, ப்ரிமோஷ் பெரேரா 24, லசந்த ருக்மால் 3/34

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 138/4 (17.1) – மாதவ நிமேஷ் 37, சமீர டி சொய்ஸா 30, கீத் குமார 2/22

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

(பி சரா ஓவல் மைதானம்)

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 115/10 (19.3) – அநுர தர்மசேன 29, சனோஜ் தர்ஷிக 20, சமிந்த பண்டார 3/22, ப்ரமோத் மதுவன்த 2/15

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 119/2 (19.4) – சரித்த துலன்ஜன் 61*, ஹஷான் துமிந்து 52

முடிவு –  சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

(NCC மைதானம்)

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 98/9 (20) – அசேல சிகேரா 21*, துலாஷ் உதயங்க 21, ஜீவன் மெண்டிஸ் 3/13, திலேஷ் குணரட்ன 2/15, அதீஷ திலன்சன 2/15

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 99/4 (14.3) – மொஹமட் சிராஸ் 26*, பபசர வடுகே 21

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

(பி சரா ஓவல் மைதானம்)

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 69/10 (16) – பினுர பெர்னாண்டோ 3/08, இஷான் ஜயரட்ன 2/08, அமில அபோன்சோ 2/10

ராகம கிரிக்கெட் கழகம் – 70/2 (9.5) – தினெத் திமோத்ய 29*, ஜனித் லியனகே 23*

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<