ப்ரீமியர் லீக் T20 தொடரின் முதல் நாளில் அசத்திய சதீர, ப்ரியமால் மற்றும் தனஞ்சய லக்ஷான்

158
Major Club T20 2021 Round UP

உள்ளூர் கழக மட்டத்தில் திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 26 முதல்தர கழகங்கள் பங்குபற்றுகின்ற T20 கிரிக்கெட் தொடர் இன்று (04) ஆரம்பமாகியது.

முதலாவது வாரத்துக்காக நிறைவடைந்த எட்டு போட்டிகளில் SSC, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், NCC, நுகெகொட விளையாட்டுக் கழகம், ராகம கிரிக்கெட் கழகம் உள்ளிட்ட அணிகள் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருந்தன.

இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

NCC கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சதீர சமரவிக்ரமவின் அரைச் சதத்தின் உதவியுடன் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவுசெய்தது

போட்டியின் முதலில் துடுப்பாடிய இராணுவ கிரிக்கெட் கழகம் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அசேல குணரட்ன 32 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்

>> சகலதுறையிலும் அசத்திய லங்கன் கழகத்துக்கு சம்பியன் பட்டம்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், 17.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம சில்வா அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களை எடுத்தார்

போட்டியின் சுருக்கம் 

இராணுவ கிரிக்கெட் கழகம் – 104./10 (19.3) – அசேல குணரட்ன 34, சிரான் பெர்னாண்டோ 3/17, ரவிந்து பெர்னாண்டோ 2/11, இசுரு உதான 2/16

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 108/4 (17.5) – சதீர சமரவிக்ரம 52, மனோஜ் சரத்சந்ர 29, மஹீஷ் தீக்ஷன 2/13 

முடிவுதமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

குழு B இற்கான மோதல் ஒன்றில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் வெற்றிக்காக துடுப்பாட்டத்தில் ப்ரியமால் பெரேரா ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை எடுக்க, பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்

போட்டியின் சுருக்கம் 

துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 128./10 (19.5)இஷான் ரங்கன 39, நிமன்த பெரேரா 23, யொஹான் டி சில்வா 20, தனஞ்சய லக்ஷான் 3/17, சாரங்க ராஜகுரு 2/23 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 129/2 (15.5) – ப்ரியமால் பெரேரா 64*, சங்கீத் குரே 36*, கித்துருவன் விதானகே 24

முடிவுகோல்ட்ஸ் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>> பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!

காலி கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தியிருந்த கொழும்பு கிரிக்கெட் கழகம், காலி கிரிக்கெட் கழகத்தை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவுசெய்தது.

போட்டியின் சுருக்கம் 

காலி கிரிக்கெட் கழகம் – 75ஃ10 (16.1)லஹிரு கமகே 2/6, லஹிரு மதுஷங்க 2/7, மாலிந்த புஷ்பகுமார 2/12, அஷான் ப்ரியன்ஞன் 2/25 

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 79/2 (7.1) – மினோத் பானுக 29*, ரொன் சந்த்ரகுப்த 24

முடிவுகொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

SSC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், க்ரிஷான் சன்ஜுலவின் அரைச்சதத்தின் உதவியுடன் SSCகழகம் 27 ஓட்டங்களால் களுத்துறை கழகத்தை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் களுத்துறை கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய நிபுன காரியவசம் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை எடுக்க, SSC கழகத்தின் ஜெப்ரி வெண்டர்சே 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்

போட்டியின் சுருக்கம் 

எஸ்எஸ்சி கழகம் – 148./8 (20) – க்ரிஷான் சன்ஜுல 52, நிபுன காரியவசம் 4/31

களுத்துறை நகர கழகம் – 121/10 (19.2) – கிஹான் ரூபசிங்ஹ 36, ஜெப்ரி வெண்டர்சே 3/25, ஹிமேஷ் ராமநாயக்க 2/21

முடிவுஎஸ்எஸ்சி கழகம் 27 ஓட்டங்களால் வெற்றி

>> இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராகும் லசித் மாலிங்க?

NCC கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

(CCC மைதானம்)

NCC கழகம் – 155/7 (20)ஹசித போயகொட 38, கமில் மிஷார 29*, அஞ்சலோ பெரேரா 22, லஹிரு உதார 22

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 106/7 (20)ஹர்ஷ விதான 25, நிபுன் ஹக்கல்ல 23, சஹன் ஆரச்சிகே 2/22

முடிவுNCC கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி 

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

(கோல்ட்ஸ் கழகம மைதானம்)

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 151/8 (20)தனுஷ் தர்மசிறி 53, கயான் மனீஷான் 42, புலின தரங்க 2/22

சுpலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 135/10 (19.2)கசுன் விதுர 36, லசித் குரூஸ்புள்ளே 35, நிம்சர அத்தரகல்ல 4/26, லஹிரு ஜயரட்ன 2/24

முடிவுகுருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 16 ஓட்டங்களால் வெற்றி 

நுகேகொட விளையாட்டு கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

(SSC மைதானம்)

நுகெகொட விளையாட்டுக் கழகம் – 164/8 (20) முதித்த லக்ஷான் 73, ப்ரமோத் ஹெட்டிவத்த 43, மிதிர தேனுர 3/25, அலங்கார அசங்க சில்வா 2/32

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 139/10 (18.2)சந்துன் வீரக்கொடி 37, மிலிந்த சிறிவர்தன 25, ப்ரமோத் ஹெட்டிவத்த 4/13, உமேஷ் கருணாரத்ன 2/27

முடிவுநுகெகொட விளையாட்டுக் கழகம் 25 ஓட்டங்களால் வெற்றி 

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

(NCC மைதானம்)

கடற்படை விளையாட்டுக் கழகம் – 87/9 (20)சானக்க ருவன்சிறி 24, இஷான் ஜயரட்ன 3/20, ஜனித் லியனகே 2/08, பினுர பெர்னாண்டோ 2/11

ராகம கிரிக்கெட் கழகம் – 88/6 (17.4)நிஷான் மதுஷங்க 27, டிலங்க அவ்வார்ட் 2/17

முடிவுராகம கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<