பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.
>>ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு<<
இந்த மாற்றத்துக்கு அடுத்தப்படியாக முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் பிரகாசித்திருந்த மிலான் ரத்நாயக்க முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியின் போது இவர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஏனைய அனைத்து வீரர்களும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால் தினுஷ, துனித் வெல்லாலகே, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அகில தனன்ஜய, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, இசித விஜேசுந்தர
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<