ரிஷப் பாண்டிடம் கிரிக்கெட் கற்றுக்கொண்ட ஒலிம்பிக் நாயகன்

87
Delhi Capitals Twitter

இந்தியாவுக்கு முதற்தடவையாக அண்மையில் வருகை தந்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரரும், ஒலிம்பிக் சம்பியனுமான மைக்கல் பெல்ப்ஸ், ஐ.பி.எல் போட்டிகளின் ஓர் அங்கமாக டெல்லியில் நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை மைதானம் சென்று நேரடியாகப் கண்டுகளித்துள்ளதுடன், கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.  

12ஆவது .பி.எல் டி.20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்ற இந்த தொடரில் இதுவரை 10 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டிகள் இடையே அவ்வப்போது சுவாரஷ்யமான சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், நீச்சல் உலகின் முடிசூடா மன்னனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற மைக்கல் பெல்ப்ஸ் அண்மையில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது கடந்த செவ்வாய்க்கிழமை பெரோ ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியை அவர் கண்டுகளித்தார்.

எல்லா காலத்திலும் மிக வெற்றிகரமான ஒலிம்பிக் வீரரான மைக்கல் பெல்ப்ஸ், அதன்பிறகு டெல்லி அணி வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர், விக்கெட் காப்பாளர் ரிஷப் பாண்ட், தென்னாபிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரும் மைக்கல் பெல்ப்ஸுடன் கிரிக்கெட் அனுபவங்ளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சென்னை அணியில் இருந்து டேவிட் வில்லி விலகல்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி ஐ.பி.எல் தொடரில்…

அதிலும் குறிப்பாக, அவர் இந்திய அணியின் இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பாண்ட்டிடம் இருந்து கற்றுக்கொள்கின்ற துடுப்பாட்ட நுணுக்கங்கள் தொடர்பான ஒருசில புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்கள் ஊடாக வைரலாக பரவிவருகின்றன.  

இந்த நிலையில், இந்தியாவுக்குச் சென்று கிரிக்கெட் விளையாடியது தொடர்பில் மைக்கல் பெல்ப்ஸ் கருத்து வெளியிடுகையில், ”இந்தியாவுக்கான எனது முதலாவது சுற்றுப்பயணத்தில் .பி.எல் போட்டியொன்றை கண்டுகளிக்க கிடைத்தமை மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. எனது வாழ்நாளில் பார்த்த முதலாவது கிரிக்கெட் போட்டியும் இதுவாகும். வீரர்கள் பௌண்டரி, சிக்ஸர் அடிக்கும் போதும், விக்கெட்டுகளை எடுக்கும் போது ரசிகர்களின் ஆரவாரம் என்னை பிரம்மிக்க வைத்தது. நீச்சலுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டை தெரிவு செய்வேனா என்று என்னால் சொல்ல முடியாது. எனினும், எதிர்காலத்தில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டை கண்டுகளிப்பதற்கு ஆவலுடன் இருக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.

இதேநேரம், ரிஷப் பாண்ட்டிடம் துடுப்பாட்டம் தொடர்பில் கற்றுக்கொண்டது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், துடுப்பாட்ட நுணுக்கங்கள் தொடர்பில் முக்கியமான விடயங்களை டெல்லி அணியுடனான பயிற்சிகளின் போது கற்றுக்கொண்டேன். துடுப்பு மட்டை எவ்வாறு பிடிப்பது, பந்துக்கு எவ்வாறு அடிப்பது போன்ற ஆரம்பகட்ட நுணுக்கங்களை அவர் சொல்லிக் கொடுத்தார். கிரிக்கெட் விளையாட்டானது பேஸ்போல் மற்றும் கோல்ப் விளையாட்டுக்களை ஒத்த வகையிலான நுணுக்களைக் கொண்டது. அதேபோ,ல டென்னிஸ் பந்துகளுக்கு எவ்வாறு வேகமாக அடிப்பது போன்ற விடயங்களையும் இங்கு கற்றுக்கொண்டேன். உண்மையில் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய அனுபவமாக இது அமைந்தது. எனவே, மீண்டும் இந்தியாவுக்கு வரும்போது இதைவிட சிறப்பாக துடுப்பாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு வருவேன் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் தொடரில் ஆர்ச்சரை ஒத்திகை பார்க்கவுள்ள இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட, இளம் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர்…

இதுஇவ்வாறிருக்க, ரிஷப் பாண்ட் நீச்சல் குறித்தும் மைக்கல் பெல்ப்ஸிடம் கற்றுக் கொண்டுள்ளார். பெல்ப்ஸ் கிரிக்கெட் விளையாட்டை கற்றுகொடுப்பீர்களா என கேட்டதற்கு அவர் கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் வரை என் வீட்டில் தங்கியே கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இது எனக்கு நல்லது. அது எனக்கு பயமாக இருக்கிறது, அது என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளது என்றார்.

33 வயதான பெல்ப்ஸ், இதுவரை 28 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று சாதனைப் பதிவை செய்துள்ளார்.அத்துடன், தனது வாழ்நாளில் 82 பதக்கங்களை வென்று சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியுள்ள அவர், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

எனினும், 2014ஆம் ஆண்டு மீண்டும் நீச்சல் போட்டிகளுக்கு திரும்பிய அவர், இறுதியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற றியோ ஒலிம்பிக்கில் 5 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<