திறமையினை நிரூபித்த தேசிய அணியின் வீரர்கள்

772

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் பிரதான கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் மேஜர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (1) மொத்தமாக 12 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. 

இன்றைய போட்டிகளில் கிடைத்த முக்கிய முடிவுகளை நோக்கும் போது  SSC அணி, கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக இலகு வெற்றி பெற்று தொடரில் தமது 03ஆவது வெற்றியினைப் பதிவு செய்தது. இதேநேரம், குசல் மெண்டிஸ் தலைமையிலான கொழும்பு கிரிக்கெட் கழகமும் விமானப்படை அணிக்கு எதிராக 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றிருந்தது. 

சதங்களை விளாசிய மொஹமட் சமாஸ், மஹேல உடவத்த

அதேநேரம் இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது தேசிய அணி வீரர்களுடன் சேர்த்து உள்ளூர் கழகவீரர்களும் அதிரடியான சதங்களை விளாசியிருந்தனர். இந்த சதங்களில், SSC அணிக்காக விளையாடியிருந்த தேசிய கிரிக்கெட் அணி ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அவிஷ்க பெர்னாந்து வெறும் 106 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 132 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில், கொழும்பு கிரிக்கெட் அணியின் தலைவரான குசல் மெண்டிஸ் உம் தனது திறமையினை மீண்டும் நிருபித்திருந்தார். அதன்படி, மெண்டிஸ் வெறும் 52 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த கமிந்து மெண்டிஸ், பாணதுறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 110 ஓட்டங்கள் பெற்று தனது திறமையினைக் காட்ட, அதே அணியின் லசித் குரூஸ்புள்ளேவும் 110 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்த வீரர்கள் தவிர ப்ளூம்பீல்ட் அணியின் நிபுன் ஹக்கல (151), கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் ப்ரியமால் பெரேரா (101*), SSC அணியின் சரித் அசலன்க (101*), NCC அணி வீரர்களான சத்துரங்க டி சில்வா 118* மற்றும் அஞ்சலோ பெரேரா 106 ஆகியோரும் இன்றைய நாளில் சதம் பெற்று தமது திறமையினை நிரூபித்திருந்தனர்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் சுய தனிமைப்படுத்தலில்!

மறுமுனையில் பந்துவீச்சினை நோக்கும் போது தேசிய அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக மாறி வரும் வனிந்து ஹஸரங்க, கொழும்பு கிரிக்கெட் அணிக்காக வெறும் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்த, வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கனகரட்னம் கபில்ராஜூம் பொலிஸ் அணிக்காக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தார். 

நுகேகொட வி.க. எதிர் ஏஸ் கெபிடல் கி.க.

SLAOC சர்வதேச மைதானம், டொம்பேகொட 

நுகேகொட வி.க. – 143 (34.1) உமேஷ் கருணாரட்ன 47, ஷானக்க கோமசரு 3/12

ஏஸ் கெபிடல் கி.க. – 104 (29.2) இரோஷ் சமரசூரிய 37, உமேஷ் கருணாரட்ன 4/28, நவீன் கவிகார 3/23

முடிவு – ஏஸ் கெபிடல் 39 ஓட்டங்களால் வெற்றி 

BRC எதிர் கண்டி சுங்க வி.க.

BRC மைதானம், கொழும்பு

BRC – 192 (49.1) சஷீன் பெர்னாந்து 55, நிஷால் ப்ரான்சிஸ்கோ 42, உமேகா சத்துரங்க 3/25

கண்டி சுங்க வி.க. – 193/9 (49.3) விஷ்வ விஜேரத்ன 34, லசித் லக்ஷான் 40/3

முடிவு – கண்டி சுங்க வி.க. ஒரு விக்கெட்டினால் வெற்றி 

ப்ளூம்பீல்ட் கி.க. எதிர் பதுரெலிய கி.க.

ப்ளூம்பீல்ட் மைதானம், கொழும்பு

ப்ளூம்பீல்ட் கி.க. – 289/9 (50) நிபுன் ஹக்கல 151, ஹர்ஷ விதான 60,  புத்திக்க சஞ்சீவ 4/44

பதுரெலிய வி.க. – 292/4 (47.3) திலகரட்ன சம்பத் 66, மிலிந்த சிறிவர்தன 59, மிஷேன் சில்வா 51/2

முடிவு – பதுரெலிய வி.க. 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

செபஸ்டியனைட்ஸ் கி.க. எதிர் பொலிஸ் வி.க. 

பொலிஸ் பார்க் மைதானம், கொழும்பு 

செபஸ்டியனைட்ஸ் கி.க. – 255 (50) மனேல்கர் டி சில்வா 72, சமீன் கன்தனாராச்சி 65, அசெல் சிகர 5/34, கனகரட்னம் கபில்ராஜ் 3/59

பொலிஸ் வி.க. – 258/6 (48) சுபுன் மதுசங்க 65, மலித் டி சில்வா 63, சத்துர ரன்துனு 56/3

முடிவு – பொலிஸ் வி.க. 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

களுத்துறை நகர கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

வெலகதர மைதானம், குருநாகல் 

களுத்துறை நகர கழகம் – 199/9 (50) கேஷான் விமலதர்ம 42, உபுல் இந்திரசிறி 2/27

நீர்கொழும்பு கி.க. – 200/2 (37) அஷேன் சில்வா 78*, லஹிரு மிலன்த 66

முடிவு – நீர்கொழும்பு கி.க. 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

கொழும்பு கோல்ட்ஸ் கி.க. எதிர் SSC 

SSC மைதானம், கொழும்பு

கொழும்பு கோல்ட்ஸ் கி.க. – 278/7 (50) ப்ரியமால் பெரேரா 101*, தனன்ஞய லக்ஷான் 77,  கலன பெரேரா 4/50

SSC – 279/2 (38.4) அவிஷ்க பெர்னாந்து 132, சரித் அசலன்க 101*

முடிவு – SSC அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

குருநாகல் இளையோர் கி.க. எதிர் சோனகர் கி.க.

சரவணமுத்து மைதானம், கொழும்பு

குருநாகல் இளையோர் கி.க. – 139 (33.5) ரவீந்திர கருணாரத்ன 91, திலேஷ் குணரட்ன 4/33, ப்ரவீன் ஜயவிக்ரம 3/46

சோனகர் கி.க. – 140/5 (32.2) மஹேல உடவத்த 65, சசித்ர சேரசிங்க 39, ரன்தீர ரணசிங்க 2/06

முடிவு – சோனகர் வி.க. 5 விக்கெட்டுக்களை 

லங்கன் கி.க. எதிர் கடற்படை வி.க.

கடற்படை மைதானம், வெலிசர 

லங்கன் கி.க. – 142 (46) கீத் குமார 72, சானக்க ருவன்சிறி 3/26

கடற்படை வி.க. – 143/5 (20.3) சானக்க ருவன்சிறி 45*, துஷார சமரக்கோன் 42, கேஷான் விஜேரட்ன 33/2

முடிவு – கடற்படை வி.க. 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

NCC எதிர் தமிழ் யூனியன் கி.க.

NCC மைதானம், கொழும்பு 

NCC – 299/5 (50) சத்துரங்க டி சில்வா 118*, அஞ்சலோ பெரேரா 106, நுவன் ப்ரதீப் 2/50

தமிழ் யூனியன் கி.க. – 262/8 (50) ரவிந்து பெர்னாந்து 71, சசிந்து கொலம்பகே 61*, சாமிக்க கருணாரட்ன 28/4

முடிவு – NCC அணி 37 ஓட்டங்களால் வெற்றி 

றாகம கி.க. எதிர் காலி கி.க.

தர்ஸ்டன் கல்லூரி மைதானம், கொழும்பு

றாகம கி.க. – 266/5 (49) நிஷான் மதுஷ்க 81, ஜனித் லியனகே 102*, சாலன டி சில்வா 2/42

காலி கி.க. – 134 (32.4) வினுர துல்ஷார 57*, இஷான் ஜயரட்ன 4/53

முடிவு – றாகம கி.க.  132 ஓட்டங்களால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கி.க. எதிர் பாணதுறை வி.க.

மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க 

சிலாபம் மேரியன்ஸ் கி.க. – 320/8 (50) லசித் குரூஸ்புள்ளே 119, கமிந்து மெண்டிஸ் 110, நிமேஷ் விமுக்தி 4/63

பாணதுறை வி.க. – 156 (43.3) சனோஜ் தன்சிக்க 51*, புலின தரங்க 3/21

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 164 ஓட்டங்களால் வெற்றி 

விமானப்படை வி.க. எதிர் கொழும்பு கி.க.

CCC மைதானம், கொழும்பு

விமானப்படை வி.க. – 154 (43.5) கலன விஜேசிறி 43, வனிந்து ஹஸரங்க 5/38

கொழும்பு கி.க. – 157/2 (19.5) குசல் மெண்டிஸ் 81*, ரொன் சந்திரகுப்தா 46

முடிவு – கொழும்பு கி.க. 8 விக்கெட்டுக்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…