Home Tamil அன்ட்ரே ரசலின் சிக்ஸர் மழையுடன் டி20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்

அன்ட்ரே ரசலின் சிக்ஸர் மழையுடன் டி20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்

170
Andre Russell

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபிக்கத் தவறிய இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டி-20 போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

18 பந்துகள் மீதமிருக்க இந்தப் போட்டியை இலகுவாக வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. முன்னதாக  இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 என வென்றமை குறிப்பிடத்தக்கது.

ஒஷேன் தோமஸின் அதிரடி பந்துவீச்சால் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

ஒஷேன் தோமஸின் அதிரடி பந்துவீச்சின் உதவியோடு இலங்கைக்கு எதிரான…

பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின்போது குசல் பெரேரா மற்றும் வனிந்து ஹசரங்க இருவரும் காயத்திற்கு உள்ளானது இலங்கை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் போட்டியில் விளையாடிய அதே பதினொரு வீரர்களுடன் இந்தப் போட்டியில் களமிறங்கியபோதும் இலங்கை அணி தனது குழாமில் ஒரு மாற்றத்தை செய்திருந்தது. வேகப்பந்து சகலதுறை வீரர் இசுரு உதானவுக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார அழைக்கப்பட்டார். 

குசல் பெரேராவின் உபாதை காரணமாக இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக நிரோஷன் டிக்வெல்ல செயற்பட்டார்.

இந்நிலையில் முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் கைரோன் பொலார்ட் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்றபோதும் முதலில் பந்துவீச  தீர்மானித்தார். 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சார்பில் எந்த வீரரும் தமது விக்கெட்டை தக்கவைத்து ஆடத் தவறினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ, ஒஷேன் தோமஸின் பந்துக்கு போல்ட் முறையில் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

Photos: Sri Lanka vs West Indies | 2nd T20I

தொடர்ந்து வந்த ஷெஹான் ஜயசூரிய, பேபியன் அலன் வீசிய 7ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் பௌண்டரி எல்லையில் வைத்து ரோவ்மன் பவல் சிறப்பாக பிடியெடுத்ததன் மூலம் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் அடுத்த பந்திலேயே குசல் பெரேராவும் 15 ஓட்டங்களுடன் தமது விக்கெட்டை பறிகொடுத்ததால் இலங்கை அணி நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. 

மத்திய வரிசையில் குசல் மெண்டிஸ் (11) சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற, அஞ்சலோ மெதிவ்ஸ் 22 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழக்க கடந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவினால் 8 ஓட்டங்களையே பெறமுடிந்தது. 

இந்நிலையில் கடைசி நான்கு ஓவர்களிலும் தசுன் சானக்க மற்றும் திசர பெரேரா ஜோடி சற்று வேகமாக ஆடி இலங்கை அணி சற்று சவாலான ஓட்ட இலக்கை நிர்ணயிக்க உதவினர். 

குறிப்பாக 19 ஆவது ஓவரில், திசர பெரேரா மூலம் இலங்கை அணி தனது இன்னிங்ஸில் முதல் சிக்ஸரை விளாசியது. அதேபோன்று டிவைன் பிராவோ வீசிய கடைசி ஓவரில் இலங்கை அணியால் 16 ஓட்டங்களை பெறமுடிந்தது.

பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் மிரட்டும் சென் ஜோன்ஸ் அணி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான..

இந்த இறுதிநேர ஓட்டக்குவிப்பின் மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. தசுன் சானக்க 24 பந்துகளில் 3 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றதோடு திசர பெரேரா 13 பந்துகளில் ஒரு பௌண்டரி ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை குவித்தார்.

இந்த இருவரும் 7 ஆவது விக்கெட்டுக்காக பெற்ற பிரிக்கப்படாத 46 ஓட்ட இணைப்பாட்டம் டி-20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி 7 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களாகும். 

எனினும் தனது 156 ஓட்ட வெற்றி இலக்கை காக்க பந்துவீச களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் ஏமாற்றங்களாக இரு வீரர்கள் காயமடைந்து அரங்கு திரும்பினார்கள். 

லசித் மாலிங்க வீசிய முதல் பந்தே வைட் ஆக வெளியே செல்ல அதனை தடுக்க முயன்ற விக்கெட் காப்பாளர் குசல் பெரேராவின் விரலில் காயம் ஏற்பட அவரால் தொடர்ந்து விக்கெட் காப்பில் ஈடுபட முடியாமல் போனது. 

இதனால் கிரிக்கெட்டின் புதிய விதிகளின்படி மேலதிக வீரரான நிரோஷன் டிக்வெல்ல தனது சொந்த ஊர் ரசிகர்களின் வரவேற்புடன் விக்கெட் காப்பில் ஈடுபட மைதானத்திற்கு வந்தார். 

தொடந்து மூன்றாவது ஓவரில் வைத்து இலங்கையின் முக்கிய சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்க உபாதைக்கு உள்ளாகி அரங்கு திரும்பியதோடு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இலங்கை பந்துவீச்சில் சற்று பலவீனம் ஒன்று ஏற்பட்டது.

எவ்வாறாயினும் டி-20 நடப்பு உலகச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி எந்த நெருக்கடியும் இன்றி பௌண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி வெற்றியை நெருங்கியது. 

கடந்த போட்டியில் அரைச்சதம் கடந்த லென்டில் சிமன்ஸை 9 ஓட்டங்களுடன் மெதிவ்ஸ் ஆட்டமிழக்கச் செய்தபோதும் மறுமுறையில் பிரன்டன் கிங் வாணவேடிக்கை காட்டினார். மாலிங்க வீசிய 6 ஆவது ஓவரில் அவர் ஒரு பௌண்டரி மற்றும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 21 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றிருந்த பிரன்டன் கிங்கை, லஹிரு குமார் ஆட்டமிழக்கச் செய்தபோதும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

ரொமன் பவல் 17 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது தசுன் சானக்கவின் பந்துக்கு ஆட்டமிழந்த நிலையில் 4 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஷிம்ரொன் ஹெட்மெயர் மற்றும் அன்ட்ரே ரசல் பந்தை பௌண்டரிகளுக்கு விளாசி இலகுவாக வெற்றி இலக்கை எட்டினர். 

பங்களாதேஷ் டி20 குழாமுக்கு திரும்பியுள்ள முஷ்பிகூர் ரஹீம்

சுற்றுலா ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள்…

டி-20 போட்டிகளில் நட்சத்திர சகலதுறை வீரரான அன்ட்ரே ரசல்  14 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். நிதானமாக துடுப்பாடிய ஷிம்ரொன் ஹெட்மயர் 42 பந்துகளில் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.  

லசித் மாலிங்க 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் எவராலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு சவால் கொடுக்க முடியவில்லை. 

மாலிங்க தலைமையில் டி-20 போட்டிகளில் இலங்கை அணி தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருகிறது. டி-20 போட்டிகளில் இலங்கை அணி தொடர்ச்சியாக பெறும் 7 ஆவது தோல்வி இதுவாகும்.   

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
155/6 (20)

West Indies
158/3 (17)

Batsmen R B 4s 6s SR
Kusal Perera c Lendl Simmons b Fabian Allen 15 13 2 0 115.38
Avishka Fernando b Oshane Thomas 9 10 1 0 90.00
Shehan Jayasuriya c Rovman Powell b Fabian Allen 16 18 3 0 88.89
Kusal Mendis c Rovman Powell b Dwayne Bravo 11 13 1 0 84.62
Angelo Mathews run out (Fabian Allen) 23 22 2 0 104.55
Dasun Shanaka not out 31 24 3 1 129.17
Wanindu Hasaranga c Shimron Hetmyer b Sheldon Cottrell, 8 8 1 0 100.00
Thisara Perera not out 21 13 1 1 161.54


Extras 21 (b 5 , lb 5 , nb 1, w 10, pen 0)
Total 155/6 (20 Overs, RR: 7.75)
Fall of Wickets 1-16 (2.3) Avishka Fernando, 2-48 (6.4) Kusal Perera, 3-48 (6.4) Shehan Jayasuriya, 4-81 (11.2) Kusal Mendis, 5-95 (13.5) Angelo Mathews, 6-109 (16.1) Wanindu Hasaranga,

Bowling O M R W Econ
Fabian Allen 4 0 24 2 6.00
Sheldon Cottrell, 4 0 29 1 7.25
Oshane Thomas 4 0 24 1 6.00
Andre Russell 4 0 33 0 8.25
Dwayne Bravo 4 0 35 1 8.75


Batsmen R B 4s 6s SR
Lendl Simmons b Angelo Mathews 9 8 0 0 112.50
Brandon King c Lasith Malinga b Lahiru Kumara 43 21 6 2 204.76
Shimron Hetmyer not out 43 42 3 0 102.38
Rovman Powell c Shehan Jayasuriya b Dasun Shanaka 17 17 2 0 100.00
Andre Russell not out 40 14 0 5 285.71


Extras 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 158/3 (17 Overs, RR: 9.29)
Fall of Wickets 1-23 (2.3) Lendl Simmons, 2-69 (7.2) Brandon King, 3-103 (12.4) Rovman Powell,

Bowling O M R W Econ
Lasith Malinga 3 0 46 0 15.33
Thisara Perera 3 0 20 0 6.67
Angelo Mathews 4 0 26 1 6.50
Shehan Jayasuriya 1 0 11 0 11.00
Lakshan Sandakan 2 0 17 1 8.50
Lahiru Kumara 3 0 28 1 9.33
Dasun Shanaka 1 0 10 1 10.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<