மதுசனின் சதத்தின் துணையுடன் மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

694

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும்  பிரிவு 3 பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டியொன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் நிறைவிற்கு வந்தது. பிரிவு 3 இல் முதலாவது தர அணிகளுள் குழு E இல் நிரலிடப்பட்டிருக்கின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் போட்டியிட்டிருந்தன. இரண்டு நாட்களைக் கொண்ட இன்னிங்ஸ் போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்துக் கல்லூரி அணித்தலைவர் ஐங்கரன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணி 67 ஓவர்களை எதிர்கொண்டு  96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்துக் கல்லூரி சார்பாக கோபிராம் அதிகபட்சமாக 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் உட்பட 07 துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளம் அணியில் சமாஸ், வியாஸ்காந்த் இணைப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷின்…

மத்திய கல்லூரியின் சார்பில் பந்துவீச்சில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் குகசதுஸ் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், இயலரசன் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணியினர் தேசிய அணி வீரர் செல்வராசா மதுசனின் அதிரடி சதத்தின் துணையுடன் 299 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மத்திய கல்லூரியின் முதலாவது விக்கெட் முதல் ஓவரிலேயே வீழ்த்தப்பட்ட போதும், தொடர்ந்து களம்புகுந்த நிதர்சன் அரைச்சதம் பெற்றுக்கொடுக்க 70 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை மத்திய கல்லூரி அடைந்தது. ஒரு முனையில் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக சரிக்கப்பட, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அனஸ்ராஜ்ஜின் 41 ஓட்டங்களின் துணையுடன் முன்னிலையை யாழ் மத்தி அதிகரித்துக் கொண்டது. 116 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்த மத்திய கல்லூரி அணிக்கு, ராஜ் கிலின்டன் மற்றும் தேசிய வீரர் மதுசன் இணைந்து 169 ஓட்டங்களினை எட்டாவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். ராஜ் கிலின்டன் 69 ஓட்டங்களையும் மதுசன் 112 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஐங்கரன் மற்றும் பிருந்தாபன் ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களையும், அங்கவன் 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

203 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இன்னிங்சை ஆரம்பித்த இந்துக் கல்லூரி அணிக்கு முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் ஒரளவு நிதானமாக ஒட்டங்களை சேகரிக்க கௌரவமான இலக்கை நோக்கி இந்து கல்லூரி நகர்ந்தது. பின்வரிசை வீரர்களும் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாட, 86 ஓவர்கள் நிறைவில் இந்துக் கல்லூரி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்த இந்துக் கல்லூரி அணி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.

ஐ.சி.சி. இன் விதிமுறைகளை மீறியதாக சனத் ஜயசூரிய மீது குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட்…

இந்துக் கல்லூரி சார்பில் தனுஸ்ரன் 40 மற்றும் கோபிராம் 36 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மற்றொரு இடது கை சுழல் பந்துவீச்சாளரான விதுசன் 4 விக்கெட்டுக்களையும், குகசதுஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

சுற்றுலா பங்களாதேஷ் இளையோர் அணிக்கு எதிரான தொடரிற்கு தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ள விஜாஸ்காந் இன்றைய போட்டியில் பங்கெடுக்கவில்லை என்பதும் அவதானிக்கத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 96 (67) – கோபிராம் 25, குகசதுஸ் 5/23, இயலரசன் 2/12

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 299 (54.4) –  செல்வராசா மதுசன் 112, ராஜ் கிலின்ரன் 69, அனஸ்ராஜ் 46, நிதர்சன் 31, ஐங்கரன் 3/26, பிருந்தாபன் 3/51, அங்கவன் 2/77

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 148/8 (86) – தனுஸ்ரன் 40, கோபிராம் 36, விதுசன் 4/41, குகசதுஸ் 2/34

முடிவுமுதல் இன்னிங்ஸ் புள்ளிகளடிப்படையில் மத்திய கல்லூரி வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க