விமர்சையாக இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண ஆரம்ப நிகழ்வு

487
U19 Youth Asia Cup - Opening Ceremony

மூன்றாவது முறையாகவும் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள், எட்டு நாடுகளின் பங்குபற்றுதலோடு நாளை(15) இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

“ஆசிய இளம் கிரிக்கெட் வீரர்களை உலக தரத்துக்கு வலுப்படுத்துதல்” என்ற தொனிப்பொருளுடன் குறித்த ஆரம்ப நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரின் தலைமையில் கொழும்பு, கலதாரி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் போட்டியில் பங்குபற்றவுள்ள அனைத்து அணிகளுடன், உத்தியோகபூர்வ அதிகாரிகள், மற்றும் பிரபல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

2012ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற முதலாவது இளையோர் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றதால், இவ்விரு அணிகளும் கூட்டு சம்பியன்களாக முடிசூடப்பட்டனர். அதன் பின்னர் 2013/14ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 40 ஓட்டங்களால் இந்திய அணி இலகுவாக வெற்றிகொண்டு சம்பியன் பட்டதை வென்றது.

ஆரம்ப நிகழ்வில் பேசிய மாண்புமிகு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர ‘’இந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய புகழுக்காக மட்டும் விளையாடாமல், நாட்டுக்காக முழுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதோடு அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

கமிந்து மென்டிஸ் தலைமையில் களமிறங்கவுள்ள இலங்கை அணி, A குழுவில், நேபால், மலேசியா மற்றும் நடப்பு சம்பியன் இந்தியாவுடன் போட்டியிடவுள்ளது. அதே நேரம், குழு B பிரிவில் வலிமைமிக்க பாகிஸ்தான் அணியோடு பங்களாதேஷ், சிங்கப்பூர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டியிட உள்ளன. குழு மட்டத்தில் முதலிடம் பெறும் இரு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறும். அத்துடன் ”நொக் அவுட்” போட்டிகள் அனைத்தும் R. பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக மின்னொளியில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிய கிரிக்கெட் சபை தலைமையகம் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் நடைபெறும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் இதுவாகும். ”ஆசிய கிரிக்கெட் சபையின் குறித்த சில கொள்கைகளின்படி ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை மேம்படுத்துவதோடு, குறித்த கிரிக்கெட் வீரர்கள் தமது இலக்கை அடைவதை உறுதி செய்தலும் ஆகும். மேலும் பகலிரவு போட்டிகளில் பங்குபற்றுவதன் முலம் எதிர் காலத்தில் தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும். பங்குபற்றவுள்ள அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று ஆசிய கிரிக்கெட் சபை அபிவிருத்தி குழுத்தலைவர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தனது கருத்தினை தெரிவித்தார்.

குழு A அணிகளுக்கிடையிலான போட்டிகள் அனைத்தும் NCC, CCC மற்றும் மொறட்டுவ, டி சொய்சா மைதானத்தில் நடைபெறவுள்ளன. அதே நேரம் குழு B இல் இடம் பெற்றிருக்கும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம், மாத்தறை உயன்வத்த மைதானம் மற்றும் மக்கோன சர்ரே கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன.

அணிகள் :

ஆப்கானிஸ்தான் – Naveen-Ul-Haq Murid (தலைவர்), Wafadar Momand, Rahman Wali Khalil, Parwiz Malikzai, Ikram Ali Khil, Naveen Obaid, Zahir Khan Pakten, Ibrahim Zadran, Nisarul-Haq Wahdat, Yousuf Zazai, Tariq Stanikzai, Zahidullah Kotwal, Qais Ahmed Kamawal, Darwish Abdulrasool, M U Rahman, Dawlat Ahmadzai (பயிற்றுவிப்பாளர்).

பங்களாதேஷ் – Mohammed Saif Hassan (தலைவர்), Sozib Hosen, Nazmul Alam, Afif Hossain, Aminul Islam Biplob, Rayan Rafsan Rahman, Habibur Rahman, Md Rakib, Mahidul Islam Bhuiyan, Nayeem Hasan, Shakhawat Hossain, Qazi Onik Islam, Yeasin Arafat, Mukidul Islam, Mohammad Abdul Halim, Abdul Karim (பயிற்றுவிப்பாளர்).

இந்தியா – Abhishek Sharma (தலைவர்), Prithvi Shaw, Sandeep K Tomar, Digvijay Birender Rangi, Chandan Sahani, Shubman Gill, Priyam Garg, Daryl S Ferrario, Ayush Jamwal, Kamlesh Singh Nagarkoti, Rahul Deshraj Chahar, Rishabh Bhagat, Izhaan Ashfaque Sayed, Simarjeet Singh, Shiva Singh, Rahul Dravid (பயிற்றுவிப்பாளர்).

மலேஷியா – Virandeep Singh (தலைவர்), Syed Aziz Syed Mubarak (Vice Captain), Mohomad Hasif Norhaizan, Mohomad Khair, Saif Ullah Malik, Naim Nazley, Arjoon Thillanathan, Mohommad Hashim, Muhamad Haziq, Ainool Haqiem Muhamed Yatim, Mohommad Mahathir Razali, Zubaidi Zulkifle, Abdul Rahman, Islah Zol, Asnawi Osman, Suresh Nawarathnam (பயிற்றுவிப்பாளர்).

நேபால் – Sandeep Lamichhane (தலைவர்), Mohammed Asif Sheikh, Dipendra Singh Airee, Sandeep Sunar, Rabindra Jung Shahi, Aadil Khan, Bhim Sarki, Anil Kumar Sah, Pawan Sarraf, Suwarnakar Uraw, Kamal Singh Airee, Nandan Yadav, Prakash KC Abhinash Karn, Rohit Kumar Paudel, Binod Kumar Das (பயிற்றுவிப்பாளர்).

பாகிஸ்தான் – Nasir Nawaz (தலைவர்), Mohsin Khan, Abdullah Shafiq, Ali Zaryab, Zahid Alam, Muhammad Arif, Waqar Ahmed, Saad Khan, Azam Khan, Shaheen Shah, Muhammad Husnain, Moosa Khan, Ibrar Zaman, Umar Khan, Mansoor Ali, Mansoor Rana (பயிற்றுவிப்பாளர்).

சிங்கப்பூர் – Shardul Anand Dorwat (தலைவர்), Aahan Gopinath Achar, Sidhanth, Ansh Bhargava, Sean Aggarwal, Rohan Ranagarajan, Krishan Chalapathy, Aman Desai, Janak Prakash, Hanshul Deep Singhania, Avi Dixit, Aryan Badhe Kiran, Bikram Biswasaray, Aryaman Uchil, Iyer Brigu, Mohomed Shoib Abdul Razak (பயிற்றுவிப்பாளர்).

இலங்கை – Kamindu Mendis (தலைவர்), Ashen Bandara, Ravindu Sanjana, Hareen Buddhila, Jehan Daniel, Revan Kelly, Hasitha Boyagoda, Thisaru Rashmika Dilshan, Praveen Jayawickrema, Vishva Chathuranga, Lasith Croospulle, Wanitha Wanninayake, Thilan Prasan, Krishan Sanjula, Nipun Ranshika, Roy Dias (பயிற்றுவிப்பாளர்).

U19 Match Fixtures