ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசிய திசர பெரேரா

746
 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும், மேஜர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (28) மொத்தமாக 11 போட்டிகள் நடைபெற்றிருந்தன. 

இன்று நடைபெற்ற போட்டிகளில் முடிவுகளை நோக்கும் போது NCC அணி, ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகத்தினை வெறும் 30 ஓட்டங்களுக்குள் மடக்கி 230 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. 

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த திசர பெரேரா, இசுரு உதான

அதேநேரம், கொழும்பு SSC அணி தொடரில் தொடர்ச்சியாக தமது மூன்றாவது வெற்றியினை பதிவு செய்ய பதுரெலிய, றாகம மற்றும் சோனகர் கிரிக்கெட் கழகங்களும் இலகு வெற்றிகளை எடுத்திருந்தன. 

துடுப்பாட்டத்தினை நோக்கும் போது இன்றைய நாளில் மொத்தமாக 05 சதங்கள் விளாசப்பட்டிருந்தன. இந்த சதங்களினை நோக்கும் போது SSC அணியின் ஷம்மு அஷான் 107 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, சோனகர் கிரிக்கெட் கழகத்தின் பப்சார 138 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதேநேரம், கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடிய லசித் அபேய்ரத்ன 100 ஓட்டங்களை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, இன்றைய நாளில் ஏனைய இரண்டு சதங்களும் இலங்கை இராணுவப்படை அணியின் சார்பில் அஷான் ரன்திக்க (124) மற்றும் ஹிமாஷா லியனகே (101*) மூலம் பெறப்பட்டிருந்தது.  மறுமுனையில், இராணுவப்படை அணியின் தலைவரான திசர பெரேரா இன்றைய நாளில் டில்ஹான் கூரேவின் ஓவரில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி, இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பெறப்பட்ட அதிவேகமான இரண்டாவது அரைச்சசதத்தினை 13 பந்துகளில் பதிவு செய்திருந்தார். 

சச்சின் டெண்டுல்கருக்கு கொவிட்-19 தொற்று!

பந்துவீச்சினை நோக்கும் போது NCC அணிக்காக சத்துரங்க டி சில்வா வெறும் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, அகில தனன்ஞய செபஸ்டினையட்ஸ் கழகத்திற்காக 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டிகளின் சுருக்கம்

 • NCC எதிர் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் 

NCC மைதானம், கொழும்பு

NCC – 260/9 (50) சாமிக்க கருணாரட்ன 63*, அஞ்செலோ பெரேரா 47, கமில் மிஷார 40, சானக்க கோமசரு 2/19

ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் – 30 (19.3) யொஹான் டி சில்வா 08, சத்துரங்க டி சில்வா 5/17

முடிவு – NCC 230 ஓட்டங்களால் வெற்றி 

 • நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் – 99 (27) மனோஜ் சரச்சந்திர 26, நிசால் தாரக்க 4/23, உபுல் இந்திரசிறி 2/27

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 100/5 (24.4) அஞ்சலோ ஜயசிங்க 42, சசிந்து கொலம்பகே 2/20

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

 • பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம், கட்டுநாயக்க 

விமானப்படை வி.க. – 143 (41.4) கலன விஜேசிங்க 44, திலகரட்ன சம்பத் 3/25

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 144/4 (36.4) டில்ஷான் டி சில்வா 55, அனுக் டி சில்வா 2/14

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

 • றாகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கி.க.

மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், கட்டுநாயக்க

றாகம கிரிக்கெட் கழகம் – 178/9 (42) ஜனித் லியனகே 82, பினுர பெர்னாந்து 43, சாருக்க தரிந்து 6/35

சிலாபம் மேரியன்ஸ் கி.க. –  139 (36.2) தசுன் செனவிரத்ன 32, இஷான் ஜயரத்ன 2/15

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி 

 • SSC எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 

SSC மைதானம், கொழும்பு

SSC – 293/5 (50) சம்மு அஷான் 107, நுவனிது பெர்னாந்து 40, ரன்தீர ரணசிங்க 3/52

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 130/7 (35) சமீர சாதமல் 35, ஜெப்ரி வன்டர்செய் 3/39, ப்ரபாத் ஜயசூரிய 2/24

முடிவு – SSC அணி 108 ஓட்டங்களால் வெற்றி 

 • சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் வி.க. 

டி சொய்ஸா சர்வதேச மைதானம், மொரட்டுவ 

சோனகர் கிரிக்கெட் கழகம் – 291 (50) பப்சார 138, பசிந்து சூரியபண்டார 48, உதித் மதுஷன் 3/64

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 153/5 (34.1) தவிஷ கஹடுவராச்சி 42, மிலான் ரத்நாயக்க 2/27

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் 44 ஓட்டங்களால் வெற்றி  (D/L முறையில்)

 • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் 

கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 295/9 (50) தனன்ஞய டி சில்வா 69, சந்துஷ் குணத்திலக்க 59, கித்ருவான் விதானகே 51, சரித் ராஜபக்ஷ 4/66

செபஸ்டினையட்ஸ் கிரிக்கெட் கழகம் – 133/5 (30) சமீன் கன்தானரேச்சி 41, அகில தனன்ஞய 3/26

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 58 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)

 • காலி கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம் 

காலி சர்வதேச மைதானம், காலி 

காலி கிரிக்கெட் கழகம் – 218 (48.3) எரங்க ரத்நாயக்க 51, சத்துர லக்ஷான் 44, புத்திக்க மதுஷன் 4/35

கடற்படை விளையாட்டுக் கழகம் – 156 (39.5) தருஷன் இடமல்கொட 50*, சலன டி சில்வா 3/39

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 62 ஓட்டங்களால் வெற்றி 

 • கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க வி.க. 

CCC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 303/5 (49) லசித் அபேய்ரத்ன 100, ரொன் சந்திரகுப்தா 76, சோனால் தினுஷ 42, சஜித்ர பெரேரா 2/44

கண்டி சுங்க வி.க. – 91 (30.1) ஹசித்த நிமால் 20, மலிந்த புஷ்பகுமார 3/21

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 212 ஓட்டங்களால் வெற்றி 

 • களுத்துறை நகர கழகம் எதிர் நுகேகொட வி.க. 

சர்ரேய் மைதானம், மக்கோன 

களுத்துறை நகர கழகம் – 164 (47.1) கெஷான் விமலதர்ம 46, கிஹான் ரூபசிங்க 35, நவீன் கவிகார 3/37

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 151/6 (32.2) முதித லக்ஷான் 46, மின்ஹாஜ் ஜலில் 30, நிலன்க சந்தகன் 3/39

முடிவு – நுகேகொட கிரிக்கெட் கழகம் 34 ஓட்டங்களால் வெற்றி 

 • இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

இராணுவப்படை வி.க. – 318/3 (41) அஷான் ரன்திக்க 124, ஹிமாஷ லியனகே 101*,  திசர பெரேரா 52*, உஷ்மான் இஷாக் 2/67

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 73/6 (17) கசுன் ஏக்கநாயக்க 36, துஷான் விமுக்தி 3/16

முடிவு – முடிவுகள் இல்லை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<