Home Tamil இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா

இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா

774

இலங்கை A அணி போராடி பெற்ற வெற்றி இலக்கை இந்திய A அணி விக்கெட் இழப்பின்றி எட்டி உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

பெல்கவுமின் யூனியன் ஜிம்கானா மைதானத்தில் இன்று (08) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 27 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு மேலும் 81 ஓட்டங்களை பெறுவதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் மத்திய வரிசையில் ஷெஹான் ஜயசூரிய சிறப்பாக துடுப்பெடுத்தாடியதோடு, அவர் பின் வரிசை வீரர் இஷான் ஜயரத்னவுடன் இணைந்து 7 ஆவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதன் மூலம் இலங்கை A அணியின் ஓட்டங்களை 223 ஆக உயர்த்தினார்.

கேய்க்வாட்டின் அபார சதத்தால் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய A அணிக்கு வெற்றி

இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் சதம் பெற்ற ஷெஹான் ஜயசூரிய தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தை பெற்றார். 139 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவர் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 101 ஓட்டங்களை குவித்தார். ஜயரத்ன 73 பந்துகளுக்கு 79 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம் இலங்கை A அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையின் எதிர்பார்ப்பை முழுமையாக சிதறிடித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 94 பந்துகளில் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் ஷுப்மான் கில் 96 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காயம் காரணமாக அரங்கு திரும்பினார்.

கெய்க்வாட் கடந்த போட்டியில் ஆட்டமிழக்காது 187 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய A அணி 33.3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கான 243 ஓட்டங்களை எட்டியது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இதே பெல்கவும் மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (10) நடைபெறவுள்ளது.    

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka A Team
242/7 (50)

India A Team
243/0 (33.3)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c & b Ishan Porel 5 13 1 0 38.46
Sadeera Samarawickrama lbw b Tushar Deshpande 6 15 1 0 40.00
Bhanuka Rajapaksa c Deepak Hooda b Tushar Deshpande 0 4 0 0 0.00
Shehan Jayasuriya c Prashant Chopra b Deepak Hooda 101 139 8 1 72.66
Ashan Priyanjan c Tushar Deshpande b Shivam Dube 5 10 1 0 50.00
Kamindu Mendis c Ishan Porel b Shivam Dube 10 24 2 0 41.67
Dasun Shanaka c Shreyas Gopal b Ruturaj Gaikwad 20 19 3 0 105.26
Ishan Jayaratne not out 79 73 7 1 108.22
Akila Dananjaya not out 7 5 0 0 140.00


Extras 9 (b 0 , lb 5 , nb 2, w 2, pen 0)
Total 242/7 (50 Overs, RR: 4.84)
Fall of Wickets 1-6 (2.5) Niroshan Dickwella, 2-7 (3.6) Bhanuka Rajapaksa, 3-16 (5.6) Sadeera Samarawickrama, 4-27 (9.4) Ashan Priyanjan, 5-49 (15.5) Kamindu Mendis, 6-81 (23.1) Dasun Shanaka, 7-223 (48.4) Shehan Jayasuriya,

Bowling O M R W Econ
Ishan Porel 9 1 38 1 4.22
Tushar Deshpande 10 0 51 2 5.10
Shivam Dube 8 0 47 2 5.88
Washington Sundar 10 0 38 0 3.80
Shreyas Gopal 7 0 26 1 3.71
Deepak Hooda 6 0 37 1 6.17


Batsmen R B 4s 6s SR
Ruturaj Gaikwad not out 125 94 14 4 132.98
Shubman Gill not out 109 96 14 2 113.54
Prashant Chopra not out 1 11 0 0 9.09


Extras 8 (b 0 , lb 2 , nb 0, w 6, pen 0)
Total 243/0 (33.3 Overs, RR: 7.25)
Bowling O M R W Econ
Lahiru Kumara 5 0 42 0 8.40
Asitha Fernando 5 0 28 0 5.60
Akila Dananjaya 9 0 56 0 6.22
Kamindu Mendis 5.3 0 44 0 8.30
Ishan Jayaratne 2 0 20 0 10.00
Shehan Jayasuriya 5 0 32 0 6.40
Ashan Priyanjan 2 0 19 0 9.50



முடிவு – இந்திய A அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<