லக்ஷான் ரொட்ரிகோ அபாரம்: இறுதிப் போட்டியில் எல்.பி பினான்ஸ் அணி

53

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் லக்ஷான் ரொட்ரிகோ அரைச்சதம் அடித்து கைகொடுக்க, எல்.பி பினான்ஸ் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 27ஆவது சிங்கர்எம்.சி. ப்ரீமியர் (நொக் அவுட்) ஒருநாள் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி நேற்று (19) நடைபெற்றது

அதிரடி பந்துவீச்சினை வெளிப்படுத்திய மொஹமட் சிராஸ்

வர்த்தக நிறுவனங்கள் இடையே 27ஆவது தடவையாக நடைபெறும் சிங்கர் ஒருநாள்….

கொழும்பு MCA மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற எல்.பி பினான்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது

மழை காரணமாக தடைப்பட்ட இந்தப் போட்டியானது 32 ஓவர்களைக் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், மழை காரணமாக இரண்டவாது இன்னிங்ஸ் ஆட்டம் இன்று (20) தொடர்ந்து நடைபெற்றது.

Photo Album : LB Finance vs John Keells Holdings | Semi Finals 1 | 27th Singer-MCA Premier League 2020 – Knock-Out stage

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோன் கீல்ஸ் அணி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 31.5 ஒவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை எடுத்தது.

இதில் ஜோன் கீல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரொஸ்கோ டட்டில் 34 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ரனித் லியனாரச்சி மற்றும் சஹன் ஆரச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டினை வீழ்த்தினர்.

லசித் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கை T20I அணியின் தலைவர் லசித் மாலிங்க அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில்….

139 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு களமிறங்கிய எல்.பி பினான்ஸ் அணிக்கு லக்ஷான் ரொட்ரிகோ மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்

இருவரும் முதல் விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது சதீர சமரவிக்ரம 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லக்ஷானுடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக 29 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து எல்.பி பினான்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய லக்ஷான் ரொட்ரிகோ 59 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியில் எல்.பி பினான்ஸ் அணி 20.5 ஓவர்கள் நிறைவில் 141 ஓட்டங்களை பெற்று இலகுவான வெற்றியை பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இந்த நிலையில், சம்பத் வங்கி மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெல்லா அணிகளுக்கிடையில் என்.சி.சி மைதானத்தில் இன்று (20) ஆரம்பமாகவிருந்த 2ஆவது அரை இறுதிப் போட்டியானது மைதானத்தில் நிலவிய ஈரப்பதன் காரணமாக நாளை (21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் – 138 (31.5)ரொஸ்கோ டட்டில் 34, திமுத் கருணாரத்ன 30, ரனித் லியனாரச்சி 2/28, சஹன் ஆரச்சிகே 2/30

எல்.பி பினான்ஸ் அணி – 141/1 (20.5)லக்ஷான் ரொட்ரிகோ 59*, சதீர சமரவிக்ரம 47. குசல் மெண்டிஸ் 25

முடிவு – எல்.பி பினான்ஸ் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<